பிக் பாஸ் (3) – 2

2. கிழக்கோத்திகளின் அயோக்கியத்தனம் தாங்க முடியவில்லை.  இத்தனை மரண கொடூரமாகவா இருக்கிறார்கள் வயோதிகர்கள்?  ஆனால் அப்படி கிழக்கோத்திகளை மட்டும் சொல்ல முடியாது.  சாக்‌ஷி என்ற பெண்ணும் எத்தனை ரவுடித்தனமாக நடந்து கொள்ள முடியுமோ அத்தனை ரவுடித்தனமாக நடந்து கொள்கிறார்.  மேட்டுக்குடியும் ஆங்கிலப் பேச்சும் இருந்தும் பேட்டை ரவுடிகளை விடக் கேவலமாக நடந்து கொள்கிறார்கள்.  அதிலும் அந்த மோகன் என்பவரின் அடாவடி, அராஜகப் பேச்சுக்களை பிராமணக் கொச்சையில் கேட்கும்போது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாகூரில் என் குப்பத்தில் குழாய்ச் … Read more

பிக் பாஸ் (3) – 1

பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல் 60 நாட்கள் பார்க்காமல் இருந்தேன்.  என்ன நடக்கிறது என்றே தெரியாது.  யார் யார் என்றும் தெரியாது.  ஆனால் ரொலான் பார்த்தைப் (Roland Barthes)  படித்தவர் யாரும் அப்படி இருக்க இயலாது.   அவர் மூலமாக மட்டுமே முதன்முதலாக நான் கற்றுக் கொண்டேன், வெகுஜன கலாச்சாரத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது;  அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று.  இருந்தாலும் அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் அதன் ஆபாசத்தை என்னால் தாங்க முடியாதிருந்தது.  60 நாட்கள் … Read more

வாடகை வீடு

இப்போது இருக்கும் சாந்தோம் நெடுஞ்சாலை வீட்டிலேயே இன்னும் பத்து ஆண்டுகள் இருந்து விடலாம் என்று எண்ணியிருந்தோம். வீட்டின் உரிமையாளரும் நல்லவர் என்றபடியால் அப்படியே ஆகட்டும் என்றார். மேலும் இங்கே வருபவர்கள் எல்லோருமே ஒரே வருடத்தில் காலி செய்து விடுகிறார்கள்; நீங்களாவது நீண்ட காலம் இங்கே இருந்தால் நல்லதுதான் என்று மேலும் சொன்னார். ஆனால் நாங்களும் ஒன்றரை ஆண்டிலேயே காலி செய்யும்படியான நிர்ப்பந்தம் ஆகி விட்டது. சொல்லப்போனால் இப்படி ஒரு கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ் இருக்கும் மாடியில் எந்தக் குடித்தனமும் … Read more

மாபெரும் சவால்…

இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள மாபெரும் சவால், தங்களுடைய படைப்புகளை அதிக அளவில் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது. ஒரு எழுத்தாளருக்கு, தன்னுடைய படைப்பினை உருவாக்குவது சாதனையென்றால், அப்படி உருவாக்கிய படைப்பினை அதற்குரிய வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது அதனினும் கூடுதலான சாதனை. இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு, எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை பெரும்பான்மையானவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் மைஆத்தர்ஸ்.காம் என்கிற வலைத்தளம். எழுத்தாளராகிய தாங்கள் எப்படி இதில் பதிவு செய்துகொண்டு உங்களது புத்தகங்களை அதிக அளவில் விற்பனை செய்ய … Read more

அவதூறு

தேவிபாரதி என்பவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. சமீபத்தில் அவர் எழுதியிருந்த ஒரு முகநூல் பதிவு என் கவனத்துக்கு வந்தது. அதில் என்னைப் பற்றி படு கேவலமான அவதூறுகளை எழுதியிருக்கிறார். நான் அவர் வீட்டில் போய் தங்கிக் கொண்டு தினமும் சாராயம் குடித்தேனாம். சிகரட் புகைத்தேனாம். இவர் அம்மா என்னென்னவோ திட்டினாராம். இவர் வீட்டில் ஒரு வாரம் தங்கி சாராயம் குடித்துக் கொண்டிருந்த என்னை இவர் தன் சக ஆசிரியர்களிடம் இருபத்தஞ்சு இருபத்தஞ்சு ரூபாயாகக் கடன் வாங்கி … Read more