பூச்சி 69

அன்புள்ள சாரு அப்பாவிற்கு,  என் கண்களில் கண்ணீருடன் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இதுதான். நான் உங்களை என் இலக்கியத் தந்தையாகக் கருதுகிறேன். இன்று என் கண்களில் வழிந்தோடும் வலிமிகுந்த கண்ணீர் உங்களுக்காக. அழைத்துப் பேசி விட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் உங்களையும் சங்கடத்தில் ஆழ்த்த மனம் வரவில்லை. விஷயத்திற்கு வருகிறேன். முரகாமியின் தீவிர வாசகன் நான். நீங்கள் தேடிப் பார்த்தாலும் அவருடைய ஒரே ஒரு நேர்காணல்தான் youtubeஇல் கிடைக்கும். தேடினாலும் அதிகம் தகவல் கிடைக்காத … Read more

பூச்சி 68

ராம்ஜிக்கும் காயத்ரிக்கும்.  பூச்சி தொடரை புத்தகமாக வெளியிடும்போது 68-இல் எதுவும் எழுதாமல் கொடுத்திருந்த புகைப்படத்தை அட்டையில் போடலாம் என்பது என் ஆலோசனை.  ஒரு பெண்ணின் தலைச்சுமையோடு நாயும் சேர்ந்து செல்லும் புகைப்படம். நேற்று விகடனைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.  160 சொச்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டதால் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய குறிப்பு அது.  விகடனைப் புறக்கணிக்க வேண்டும்; விகடனில் இனி நான் எழுத மாட்டேன் என்பது போன்ற வீரப்பிரகடனங்களைக் கொண்ட குறிப்பு.  பின்னர் அராத்து மற்றும் … Read more

ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி : கதை வாசிப்பு: வித்யா சுபாஷ்

மேற்கண்ட கதையை தில்லியில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நேரத்தில் அதன் விளைவாக தில்லியில் 3000 சீக்கியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வைத்து எழுதினேன்.  அந்த சீக்கியப் படுகொலைகளில் திர்லோக்புரி என்ற பகுதியில் மட்டும் 2000 சீக்கிய ஆண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  அந்தக் கொலைகள் நடந்த ப்ளாக்குக்கு எதிர்சாரியில்தான் நான் வசித்தேன்.  அதனால் அதை நான் பார்க்க நேர்ந்தது.  இது ஒரு நேரடி சாட்சியக் கதை.  இதை கோமல் சுவாமிநாதன் நடத்திய சுபமங்களாவில் எழுதிய போது குற்றாலம் … Read more

ஒரு கவிதை வாசிப்பு

எங்களுடைய எழுத்தாளர்களை அவர்களின் படைப்புகளிலிருந்து ஒரு சிறிய பகுதியைப் படிக்கச் சொல்லி, எங்களுக்கு அனுப்புமாறு கேட்டிருந்தோம். (கவிஞர்களிலிருந்து ஆரம்பிக்கிறோம். சாருவை ஸீரோ டிகிரியில் இருக்கும் கவிதை ஒன்றைப் படிக்கச் சொன்னதால் இந்தப் பட்டியலில் சேர்த்து விட்டோம்).சொல்லி அரைமணி நேரத்தில் சாரு அனுப்பியதால் அவருடைய வாசிப்பிலிருந்து ஆரம்பிக்கிறோம். எழுத்து பிரசுரம்

மஹாபாரதம்

The Walls of Delhi என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய உதய் ப்ரகாஷும் நானும் ஒரிஸாவின் கிராமம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெட்டிக் கடையில் காரை நிறுத்தி வெற்றிலைப் பாக்கு வாங்கினேன்.  கடையில் ஒரு பதினைந்து வயதுப் பையன் இருந்தான்.  இந்தப் பட்டிக்காட்டில் எதைப் பார்க்க வந்தீர்கள் என்று கேட்ட அவனிடம் நாங்கள் எழுத்தாளர்கள் என்றார் உதய் ப்ரகாஷ்.  எழுத்தாளர் என்பதற்கு அவர் சொன்ன லேகக் என்ற சுத்த ஹிந்தி அந்த ஒரிஸா பையனுக்குப் … Read more

விகடனைப் புறக்கணிக்க முடிவு

நேற்றுதான் விகடனில் என்னுடைய சிறிய பேட்டி ஒன்று வெளிவந்திருந்தது. அதுவே விகடனில் வெளிவரும் என் கடைசிப் பேட்டி. இனிமேல் விகடனில் எதுவும் எழுத மாட்டேன் என்று நான் எழுதினால் அதில் ஒரு கருத்துப் பிழை இருக்கும். துணுக்கு மாதிரிதான் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை அதில் என்னை அணுகுவார்கள். விகடன் தடத்தில் ஒரு நீண்ட பேட்டி வந்தது. அந்த மாதிரி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இனிமேல் அப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்காது. விகடனை நான் இனி முழுமையாகப் … Read more