ராஸ லீலா கலெக்டிபிள்

சுமாராக 50 பேர் பணம் கொடுத்திருக்கிறார்கள். இது மிகப் பெரிய விஷயம். ஏற்கனவே வெளிவந்த ஒரு புத்தகத்தை 10000 ரூ. கொடுத்து வாங்க முன்வந்தது என் மீதும் என் எழுத்தின் மீது நீங்கள் கொண்ட அன்பினால் மட்டும்தான். அதற்கு என் மனமார்ந்த நன்றி. உலகில் வேறு எந்தப் புத்தகமும் இப்படி வெளிவந்திருக்குமா என்று தெரியவில்லை. இன்னமும், என்னுடைய 50க்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனையில் இருந்தும் ராயல்டி இரண்டு லட்சத்தைத் தாண்டவில்லை. இந்த நிலையில் ராஸ லீலா கலெக்டிபிளுக்கு … Read more

காஷ்மீர் (3)

அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் தேசத் துரோகியாக மாற முடிவு செய்து விட்டது எப்பேர்ப்பட்ட துரதிர்ஷ்டம்! காஷ்மீர் பிரச்சினை ஒரு சர்வதேசப் பிரச்சினை அல்லது இந்தியா பாகிஸ்தானுக்கான பிரச்சினை என்று சொல்லி காங்கிரஸ் கட்சி தேசத்துரோக முடிவை எடுத்து விட்டது. அடுத்த தேர்தலிலும் மோடி இதை விடவும் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற காங்கிரஸ் இப்போதே வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. இப்படியே போனால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி இதை விட அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுவார். … Read more

இயக்குநர் மிஷ்கின் நடத்தும் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை

தமிழ் ஸ்டுடியோ அருணின் பதிவு: இயக்குநர் மிஷ்கின் நடத்தும் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை – முற்றிலும் மாறுபட்ட முயற்சி 24-08-2019, 25-08-2019 சனி மற்றும் ஞாயிறு, முழு நாள் நிகழ்வு இடம்: சென்னை கட்டணம்: 10,000 (இரண்டு நாட்களும் மதிய உணவு உட்பட) ஒரு நாள் தியரியாகவும் இன்னொரு நாள் ப்ராக்டிக்கலாகவும் வகுப்பு நடைபெற இருக்கிறது. முதல் முறையாக இயக்குநர் மிஷ்கின் புது மாதிரியான ஒரு பயிற்சியை வடிவமைத்து தமிழ் ஸ்டுடியோவிற்காக நடத்திக்கொடுக்க இருக்கிறார். இதுவரை நடந்த … Read more

காஷ்மீர் (2)

”இந்த சட்ட நீக்கத்தைஅறிமுகப்படுத்தும் முன் காஷ்மீரில் மிகப் பெரிய எண்ணிக்கையில் ராணுவத்தை அனுப்பி, 144 தடை உத்தரவைப் பிறப்பித்து, தலைவர்களை வீட்டுக்காவலில்  வைத்து, இணையத்தொடர்பை துண்டிக்கிறது மைய அரசு.  அதற்கான அவசியம்தான் என்ன? ஒரு சட்ட திருத்தத்தை மக்கள் ஏற்காவிடில் அதற்கு எதிராக போராடும் உரிமை அவர்களுக்கு இல்லையா? அவர்கள் போராடுவார்கள் என முன்கூட்டியே  அறிந்து ஒரு மாநிலத்தின் மீது “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தொடுப்பது சர்வாதிகாரத்தின்  உச்சம் அல்லவா!” அபிலாஷ் எழுதியிருந்த பத்தி இது.  உள்துறை அமைச்சகத்திலிருந்து இந்த முன்னேற்பாடுகளைச் செய்திருக்காவிட்டால் இந்நேரம் காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கும்.  அதை அனுமதிக்கும் அளவுக்கு அத்தனை முட்டாள்தனமான அரசாங்கமா இது?  இந்த நடவடிக்கையில் எந்த சர்வாதிகாரமும் எனக்குத் தெரியவில்லை.  மேலும், காஷ்மீரிகளிடம் இப்போது ”உங்கள் விருப்பம் என்ன?” என்று … Read more

காஷ்மீர்

என் எழுத்தை அக்கறையோடு வாசிப்பவர்களுக்கு ஒரு விஷயம் இதற்குள் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  அவர்கள் என் கருத்துக்களோடு முரண்படலாம்.  ஆனாலும் இந்த விஷயத்தை அவர்கள் கவனித்திருக்கலாம்.  அதாவது, எந்தப் பிரச்சினை குறித்தும் அந்தப் பிரச்சினையின் அடிப்படையை வைத்துத்தான் அணுகுவேன்.  உதாரணமாக, நான் மோடி எதிர்ப்பாளன் என்பது உங்களுக்குத் தெரியும்.  அதனால் அவர் செய்யும் அத்தனை காரியங்களையும் எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்க மாட்டேன்.  இதுதான் பிரச்சினையின் அடிப்படையில் ஒரு பிரச்சினையை அணுகுவது.  இதை நான் பெரியாரிடமிருந்தே கற்றுக் … Read more