28. சொற்கடிகை

நேற்றைய குறிப்பில் ஒரு விஷயத்தை எழுத மறந்து போனேன். இத்தாலியின் வறுமை பற்றி. தனிநபர் வருமானம் போன்ற புள்ளி விவரங்களைப் பார்த்தால் இந்தியாதான் இத்தாலியை விட பல மடங்கு கீழே இருப்பது போல் இருக்கும். ஆனால் புள்ளி விவரத்தை விட எதார்த்த வாழ்க்கை தரும் அனுபவங்கள் நேர்மாறானவை. இத்தாலியின் வறுமை பற்றி எழுதிய போது இளைஞர்களைக் குறிப்பிட்டேன். அதில் ஒரு சாரார், ஆண் விபச்சாரர்கள். Male strip clubகளில் பணி புரியும் இளைஞர் கூட்டம். மிலன் என்ற … Read more

27, சொற்கடிகை பற்றி ஒரு கேள்வி

கார்ல் மார்க்ஸ் ஒரு கேள்வி கேட்டிருந்தார். இத்தாலி இந்தியாவை விட ஏழை நாடு என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? இதற்கு நான் ஒரு அம்பது பக்கமாவது பதில் எழுத வேண்டும். ஔரங்ஸேபில் மூழ்கிக் கிடக்கிறேன். அப்படி அம்பது பக்க பதிலை எழுதினால் கடைசி வரியாக இத்தாலியை விட இந்தியா ஏழை நாடு என்று முடிப்பேன். இத்தாலியின் ஏழ்மை பற்றி அத்தனை கதைகள் – பஸோலினி காலத்திய கதைகள் அல்ல – இன்றைய கதைகள் – உண்மைக் கதைகள் … Read more

27. சொற்கடிகை

”நாளை நானே அரசு மீன் கடைக்குச் சென்று நண்டு வாங்கி வரலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.”  இருபத்தாறாவது அத்தியாயத்தை மேற்கண்டபடி முடித்திருந்தேன்.  எழுதின தினம் ஏப்ரல் 13.  ஆனால் திட்டமிட்டபடி மறுநாள் நண்டு வாங்கப் போகவில்லை.  காலண்டரில் அன்று சிவப்பு மை அடித்திருந்தது.  ஏன் என்று பார்த்தால் சித்திரை ஒன்று.  வருடப் பிறப்பு அன்று எப்படி அசைவம்?  இதோ ஏப்ரல் 23 ஆகி விட்டது.  இன்னும் நண்டு வாங்கப் போகவில்லை.  ஒருநாள் கைமணம் என்ற கடையிலிருந்து வரவழைத்தேன். … Read more

தேவதையும் ரத்தக் காட்டேரியும்

எனக்கொரு வாட்ஸப் சேதி வந்தது ஹாய், நான்தான் உன் பக்கத்து வீட்டுப் பஞ்சவர்ணக் கிளி எப்படி நம்புவது உடனே வந்தது செல்ஃபீ ஒரு சோபாவில் அமர்ந்திருந்தது கிளி என் எஜமானர் வாங்கிக் கொடுத்தார் என்றது அதற்குப் பிறகு வந்தன ஏராளமான வாட்ஸப் சேதிகள் ஒருநாள் குட்மார்னிங் வந்தபோது இனிமேல் இப்படி அனுப்பாதேயென பதில் அனுப்பினேன் இளைய கிளி என்பதால் சர்வ சாதாரணமாகப் பறந்தன சிகப்பு நிற இதயக் குறிகள் வீட்டில் பார்த்தால் ரகளையாகுமே என்று இனிமேல் வேண்டாம் … Read more

சொல்

எறும்பின் காலம் வேறு மனிதனின் காலம் வேறு பட்சிகளின், நட்சத்திரங்களின் காலம் வேறு.இது யார் சொன்னது எனக் கேட்டது பக்கத்து வீட்டுப் பலவர்ணக் கிளி. காலத்தைப் பேசியவரின் பேர் சொன்னேன்அதற்கும் எனக்குமிடையே சொற்களின் வழியே ஒரு சிநேகிதம் மலர்ந்தது வளர்ந்தது மலர்வதற்கு நட்பு என்ன மலரா வளர அதுவொரு கொடியா என்றது பஞ்சவர்ணம் பேரை மாற்றாதே அடையாளமிழந்து என்னால் வாழ முடியாது என்று கத்தியது கிளி  முன்பு வாழ்ந்த பேருக்கு இது பரவாயில்லை எனத் தலையசைத்தது.ஒருநாள் எங்கள் தத்துவ உரையாடலின் … Read more

இன்றைய வெனிஸ் மாநாடு

இன்று வெனிஸில் நடக்க இருக்கும் அறிவியல் – கலை மாநாடு பற்றி நேற்று எழுதியிருந்தேன். இந்தியாவிலிருந்து இரண்டு நரம்பியல் நிபுணர்கள் அங்கே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸில் பணி புரிபவர்கள். இலக்கியத்தில் நான். போயிருக்கலாமோ என்று நேற்றிலிருந்து யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. எனக்கு ஸல்மான் ருஷ்டி மீது பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் அலெக்ஸாந்தர் க்லூஜை சந்தித்து அளவளாவியிருக்கலாம். பரவாயில்லை என்று தேற்றிக் கொண்டேன். ஔரங்ஸேப் முக்கியம். முடிக்க வேண்டும். முடிக்க வேண்டும். முடிக்க வேண்டும். … Read more