பசி மற்றும் இம்சை கதை பற்றிய ஒரு விவரம்

பசி மற்றும் இம்சை குறித்த ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் சிறுகதையில் வரும் ஒரு பாத்திரம் பற்றி என் நண்பர் ஒருவர் ஒரு சந்தேகம் கேட்டிருந்தார். அந்த சந்தேகத்துக்குப் பதில் எழுத முனைந்தேன். அது ஒரு நீண்ட கதையாக ஓடி விட்டது. அதனால் அதை மூன்றாம் பாகமாக ஆக்கினேன். ஆக, சிறுகதை குறுநாவலாக மாறி விட்டது. கதையின் பழைய பகுதிகளை தளத்திலிருந்து நீக்கி விட்டேன். கதையில் சில விவரங்கள் தேவைப்பட்டதால் சீனிக்கு அனுப்பியிருக்கிறேன். வந்ததும் இங்கே பதிவேற்றம் செய்வேன். கதையின் … Read more

சாரு நிவேதிதா: எழுத்தும் வாழ்வும் – கார்ல் மார்க்ஸ்

சாரு நிவேதிதாவைப் பற்றி எழுதுவதும் அவரது எழுத்தைப் பற்றி எழுதுவதும் வேறு வேறல்ல. Transgressive எழுத்தாளராக தன்னை அறிவித்துக்கொண்டவர் அவர். அதிலிருந்தே தொடங்குகிறது அவர் மீதான சமூக விலக்கம். எந்த ஒரு எழுத்தாளனும் தனது பால்யத்தை வேறு வேறு விதமாக எழுதிப் பார்ப்பதில் இச்சை கொள்கிறான். ஆனால் ஒரு transgressive எழுத்தாளன் தனது பால்யத்தை அதன் மரபார்ந்த முறையில் எழுத முடியாது. ஏனென்றால் பால்யத்தின் மீதான ரொமாண்டிஸிஸத்தை, தான் இதுகாறும் வந்தடைந்திருக்கும் வாழ்வின் வெளிச்சத்தில் வைத்து அவன் … Read more

ஹெட் மஸாஜ் பற்றி வளன்

நான் போன ஜென்மத்தில் தாய்லாந்தில் பிறந்து ஆயிரக்கணக்கானோருக்கு மஸாஜ் செய்து விட்டுக் கொண்டிருந்தேன் போலிருக்கிறது. வளன் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த பதிவைப் பாருங்கள்: ஆட்டோஃபிக்ஷன் வகைமையில் நிஜத்துக்கும் கற்பனைக்குமான எல்லைக்கோடுகள் இல்லாமல் போனாலும் வாசக மனம் எது உண்மை எது புனைவு என்பதை தேடிக்கொண்டேயிருக்கும். இந்தக் கதையில் வரும் கோவிந்தன் யார் என்பதை மனம் தேடிக்கொண்டேயிருக்கிறது. அதேபோல இந்த ஹேட்மசாஜ் எனக்கும் கிடைத்திருக்கிறது. தரையில் கால் மடித்து உட்கார முடியாததால் அன்று சாரு வீட்டில் நான் படுத்தவாக்கிலேயே பேசிக் … Read more

ஒரு கேள்வியும் பதிலும்

வணக்கம் சாரு. விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டதும் சொல்ல நினைத்தேன். தாவித் திரியும் மனநிலையில் அப்பொழுது சொல்லவில்லை. வாழ்த்துகள். ஓய்வு நேரங்களின் பெரும்பகுதியை வாசிப்பிற்குத் தருவதற்கான நெருக்கடிகள் இல்லாது இருந்த காலகட்டத்தில் எங்கள் ஊர் நூலகங்களே அதற்கு உதவின. ஆனால், அங்கிருந்து கிடைத்த பெரும்பாலான நூல்களை வாசிப்பதற்கான மனநிலையை நான் கடந்திருந்தேன். ஆரம்பகால வாசகனுக்கு, பொழுதுபோக்கு சார்ந்த வாசிப்புகளுக்கான புத்தகங்களே நூலகங்களை அடைத்து நின்றன. இப்போதும் அத்தனை  முன்னேற்றம் இல்லை என்றபோதும் இலக்கியம் சார்ந்த ஆளுமைகளின் படைப்புகளைத் தேடினால் … Read more

நிகழ்காலத்தில் நின்றபடி…

Charu … Of late I can feel our old Charu… சாருவின் எழுத்தில் இருக்கும் அந்தத் துள்ளல், பகடி எல்லாம் மீண்டும் பழைய வீரியத்துடன் திரும்ப வந்திருப்பது போல் இருக்கிறது. இந்த சாருவை நான் சில பல ஆண்டுகளாக மிகவும் மிஸ் பண்ணினேன். உங்கள் எழுத்தின் சிறப்பு என்னவென்றால், அது காலத்தைக் கடந்து நிற்கிறது. ஒரு வாசகர் எந்தக் காலகட்டத்தில் உங்கள் எழுத்தைப் படித்தாலும் அது அந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது. உதாரணமாக, இருபத்தைந்து … Read more

பிரியாணி

சாரு, உங்களுக்குத் தனியாகக் கொஞ்சம் பிரியாணியை எடுத்து வைக்காதது பற்றி எழுதியிருந்தீர்கள். வருத்தமாகத்தான் இருந்தது. கறி நிறையவே இருப்பதாக யாரோ கூட்டத்தில் சொன்னதும், அதனால் உங்களுக்கு இருக்கும் என்று நம்பினேன். கடைசியில் பார்த்தால் , உங்களுக்குக் கறி இல்லாமல் போய் விட்டது. அது மட்டும் இல்லாமல், நானும் குஷ்கா மட்டும்தான் சாப்பிட்டேன். அடுத்த சந்திப்பில் இம்மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். சந்திப்பில், சில பேர், பிரியாணியை இப்பொதுதான் கண்ணால் பார்ப்பது போல் வெளுத்து வாங்கினார்கள். பல இடத்தில்  … Read more