குகை வாழ்க்கை

அன்புள்ள சாருவுக்கு, இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். இப்போதும்கூட எழுத வேண்டுமென்று தோன்றியதற்குக் காரணம் உண்டு. பதினைந்து வருடங்களாக நான் உங்கள் வாசகி. ஆரம்பித்தில் சுஜாதா என்னுடைய அலமாரியை நிறைத்தவர். பிறகு ஜெயகாந்தன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என வாசித்துவிட்டு ஒருசில கதைகளுடன் நிறுத்திவிட்டேன். தமிழிலக்கியத்தில் நான் கேள்விபட்ட முதல் அழகான புனைப்பெயர் உங்களுடையது. அதன் வசீகரம் அப்படி. எங்கோ எதிலோ உங்கள் பெயர் என்னை சற்று நிறுத்தியது.  உங்கள் புத்தகங்களை வாங்கி வாசித்தேன். … Read more

பாறை

அடிக்கடி ஜெயமோகனை முன்னுதாரணமாகக் காண்பித்துக் கொண்டிருப்பார் என் ஆருயிர் நண்பர் ஒருவர்.  நிறைய மதிப்பெண் வாங்கும் பக்கத்து வீட்டுப் பையனை அடிக்கடி உதாரணம் காட்டும் ஓர் உன்னதத் தாயின் மனநிலையிலேயே இருப்பவர் அந்த நண்பர் என்பதால் அவர் சொல்வது எதையும் நான் காதில் போட்டுக் கொள்வதில்லை.  இருந்தாலும் அவரது பேரன்பின் காரணமாக அவரும் சொல்வதை நிறுத்துவதில்லை.  அப்படி அவர் சொல்லும் ஒரு விஷயம், ஜெயமோகன் ஒரு பாறை மாதிரி.  அவர் யார் கருத்தையுமே கேட்க மாட்டார்.  அவர் … Read more

நான்தான் ஔரங்ஸேப்… சிறப்புப் பதிப்பு

நான்தான் ஔரங்ஸேப்… சிறப்புப் பதிப்பு வந்து சேர்ந்து விட்டது. கையெழுத்திட்டு பதிப்பகத்திடம் கொடுத்து அவர்கள் அதை குரியர் செய்ய வேண்டும். உங்கள் கைகளுக்குக் கிடைக்க இரண்டொரு தினங்கள் எடுக்கும். இதுவரை எனக்கு முகவரி தராத நண்பர்கள் உடனடியாக முகவரியை அனுப்பித் தாருங்கள். charu.nivedita.india@gmail.com

பாண்டிச்சேரி சந்திப்பு தொடர்பாக…

சந்திப்புக்கு வருபவர்கள் புகை பிடிக்கலாம். அது ஒரு திறந்த வெளி என்பதால் புகைக்குத் தடையில்லை. ஆனால் குடித்த சிகரெட் துண்டுகளை கண்ட இடத்தில் போடக் கூடாது. மேலும், பல புகைஞர்கள் செடி வைக்கப்பட்ட தொட்டிகளில் நசுக்கிப் போடுகிறார்கள். இதுவரை நான் வந்த எல்லா சமயங்களிலும் செடித் தொட்டிகளில் சிகரெட் துண்டுகளைப் பார்த்து அதையெல்லாம் எடுத்து எடுத்து குப்பையில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். உங்களையெல்லாம் யார் வளர்த்தது? அவர்களைத்தான் சந்தித்துப் பேச விரும்புகிறேன். இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். செடிக்கு … Read more

ஏன் எப்போதும் அழுமூஞ்சியாக இருக்கிறீர்கள்?

எனக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தது தொடர்பாக ஜெயமோகனின் வலைத்தளத்தில் தினமும் அவரது வாசகர்கள் எழுதும் கடிதங்கள் பிரசுரமாகின்றன. என் வாசகர்கள் பலரிடமும் அவற்றைப் படிக்கிறீர்களா என்று கேட்டேன். ஒருத்தர் கூட படிப்பதாகத் தெரியவில்லை. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை சாருவைப் படிக்காதவர்கள், இப்போது புதிதாகப் படிக்கத் தொடங்கியிருப்பவர்கள், இதுவரை என் மீது வெறுப்பாக இருந்தவர்கள் என்று பல சாரார் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் கூட நீங்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதுதான் … Read more

நான்தான் ஔரங்ஸேப்…

முன்பதிவு செய்த “நான்தான் ஔரங்ஸேப்…”புத்தகம் கிடைக்கப்பெற்றது. வீட்டில் புத்தகத்தை பிரித்துப் பார்த்துவிட்டு எழுத்தாளரின் கையெழுத்துடன் வந்திருப்பதைக் கண்டு… அதிகப்பணம் செலுத்தி வாங்கிவிட்டு நான் அதை அவர்களிடம் மறைப்பதாக சந்தேகத்துடன் கேட்டார்கள். எனக்கே கையெழுத்து சமாச்சாரம் இப்போதுதான் தெரியும் என்று அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன். அடுத்ததாக….நேரடியாக எனது பெயர் குறிப்பிட்டு இருப்பதைப் பார்த்து நீங்கள் எனக்கு மிக நெருக்கமான நண்பரா என்று கேட்டார்கள். “என்னது எனது பெயரை குறிப்பிட்டிருக்கிறாரா….” அதைப் பார்த்ததும் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை, செம … Read more