நடனத்தில் ஒரு பிழை

”அண்டத்தின் விகசிப்பில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள்”  என்ற வரியில் ஒரு பெரிய பிழை உள்ளது. விகசிப்பு, விகாசம் என்றால் மலர்ச்சி என்று பொருள். சந்தேகப்பட்டுத்தான் நிகண்டில் பார்த்தேன். எனவே அந்த வாக்கியம் “அண்டத்தின் பிரமாண்டத்தில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள்” என்று வர வேண்டும். மூலத்தில் மாற்றி விட்டேன். யாரும் இது பற்றிக் குறிப்பிடாதது சற்றே வருத்தம். கவிதையில் இன்னொரு வாக்கியமும் சேர்த்திருக்கிறேன். “மரணம் கண்டு நகைத்திருக்க மாட்டார்கள்”. கவிதையைத் திரும்பவும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் … Read more

நடனம்

பொதுமக்கள் சேவைக்கான அரசு அலுவலகம்சிஸ்டம் வேலை செய்யவில்லையெனக்காத்திருந்த நேரத்தில்அங்கிருந்த மனிதர்களை நோக்கினேன்நாற்பது ஐம்பது பேர் இருக்கலாம்ஒவ்வொருவர் முகத்திலும்ஏதோ நோய்மையின் நிழல்மருத்துவமனை அல்ல அதுஆனாலும் அவர்கள் நோயாளிகளின்தோற்றம் கொண்டிருந்தார்கள் அவர்கள் ஒருபோதும்வாய்விட்டுச் சிரித்துகாற்றுடன் கைகோர்த்துநிலவின் குளிர்மையில் திளைத்திருக்க மாட்டார்கள்பிறர் பசியின் வலியுணர்ந்து வெகுண்டிருக்க மாட்டார்கள்மலையடிவாரத்தின் தனிமையில் தோய்ந்திருக்க மாட்டார்கள்கவிதையுடன் மௌனித்துஅண்டத்தின் விகசிப்பில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள் மரணம் கண்டு நகைத்திருக்க மாட்டார்கள் காதல்மிகக் கொண்டு முத்தமிட்டிருக்க மாட்டார்கள்கலவியின் பரவசம் கண்டிருக்க மாட்டார்கள்பிறர் துயர் கண்டு கசிந்திருக்க மாட்டார்கள்வாடிய … Read more

குமுறல்

கவிதையையும் விட்டு வைக்கவில்லையாஎனக் கேட்கிறான் சக கவிமெல்லிய புன்னகையுடன். உண்மைதான்கவிதை தீண்டாத வாழ்நாளில்இப்போதுஅகவை எழுபத்து மூன்றில்தினம் மூன்று கவிதைபொங்கி வழிகிறதுபுதுப்புனல் போல்அடக்க முடியாமல்.ஏதோவொரு குமுறலைகரையில் தணிக்க முயல்கிறது.ஆனால்எழுத எழுதகுமுறல் ஒரு பாறையாகமார்பில் கனக்கிறதுமேலும் கனக்கிறது.

காணவில்லை

எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்ததுஇது அதிசயமாபேரழிவாஅல்லதுகாலத்தின் மாய விளையாட்டாபேரழிவின் அடையாளங்கள் ஏதுமில்லைஆனால் மனிதர் யாரையும் காணோம் இல்லங்கள் மாளிகைகள் குடிசைகள்மௌனத்தின் மயானமாகக் கிடந்தனநேற்றைய மழையின் எச்சமாகசாலைகளில் நீர் தேங்கிகாற்றில் பழைய புத்தகத்தின் மணம்மறந்துபோன வாழ்க்கையை நினைவூட்டியதுஒரு ஈ எறும்பு எலி கூட இல்லைசெல்லப் பிராணிகளும் மறைந்தனபோக்குவரத்து அறிகுறியும் இல்லை நான் வளர்த்த பூனைகள்மூச்சு விட முடியாமல்எந்நேரமும் என் மீதுஅன்பைப் பொழிந்த என் மனையாள்யார் சுவடும் இல்லைஆனால் வாசலில் கோலம் மட்டும்அவள் விரல்களின் நினைவாய் நின்றதுஒவ்வொரு இல்லமாகப் பார்த்தேன்ஒரு … Read more

பெருமிதம் கொள்கிறேன்

சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் தொகுதியை செப்பனிட்டுக்கொண்டிருக்கிறேன். சர்வதேச அளவில் எனக்கு நெருக்கமான கவிகள் ஒக்தாவியோ பாஸ், நிகானோர் பார்ரா, பாப்லோ நெரூதா, ஜாக் ப்ரேவர், செஸ்லா மிலாஸ் (Czeslaw Milosz), விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா (Wislawa Szymborska), வ்ளதிமீர் நொபக்கோவ், சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கி, ஜோஸஃப் ப்ராட்ஸ்கி (Joseph Broadsky). இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது. இவர்களில் நிகானோர் பார்ராவும் நெரூதாவும் ஒரே தேசத்தவர்கள். அதை விட ஆச்சரியம் ஸிஸ்லோ மிலாஸும் ஸிம்போர்ஸ்காவும் ஒரே தேசத்தவர்கள். … Read more

நீர் மேல் நடக்கும் தேவதை: செல்வா

எங்களால் செல்வா என்று அழைக்கப்படும் செல்வகுமார் கணேசன் சுமார் இருநூறு கவிதைகளை எழுதியிருப்பார். ஆட்டோநேரடிவ் பதிப்பகத்தின் நிர்வாகி. வாசகர் வட்டத்தின் முக்கியமான நண்பர். அன்பின் மறு உருவம். அவருக்குக் கோபம் வந்து யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். குரல் உயர்த்திக் கூட பேசியதில்லை. இவர் இந்த உலகில் எப்படி ஜீவிக்கிறார் என்றே இவரைக் காணும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இத்தனைக்கும் ஒரு நிறுவனத்தின் தலைவர் வேறு. அவர் எழுதிய கவிதை ஒன்றை இன்று கண்டேன். இதைப் படித்ததிலிருந்து … Read more