நிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை

தமிழ்நாட்டில் எழுத்தாளர் என்றால் கூட அர்த்தம் புரிந்து விடும். ஆனால் புத்திஜீவி என்றால் அப்படி ஏதும் புதியவை ஆர்கானிக் காய்கறி வந்துள்ளதா என்று கேட்பார்கள். தமிழ்நாட்டில் நான் வெகுவாக மதிக்கும் புத்திஜீவிகளில் ஒருவர் டி. தர்மராஜ். அவர் முகநூலில் எழுதியிருந்த இந்தச் சிறிய கட்டுரை நிர்மலா தேவி பிரச்சினையில் என் எண்ணத்தை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த விஷயம் என்னைப் பெரிதும் பாதித்து விட்டது. அந்த நான்கு மாணவிகளும் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப மறுத்தும் அந்த … Read more

சோறே தெய்வம்!!!

வரும் 18-ஆம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நான் வெளியில்தான் சாப்பிட்டாக வேண்டும்.  எனக்கு சமைக்கப் பிடிக்கும் என்றாலும் என் ஒருவனுக்காக சமைப்பது அலுப்படிக்கும் விஷயம்.  அவந்திகா வெளியூர் செல்கிறாள்.  என் வீட்டை ஒட்டியிருக்கும் தாவத் உணவு விடுதி ஆடம்பரமாக இருக்கிறதே தவிர எதை வாங்கினாலும் அதில் நூறு மில்லி அளவுக்கு எண்ணெய் மிதக்கிறது.  No exaggeration.  நூறு மில்லி.  என் வீட்டுக்கு எதிர்சாரியில் உள்ள பாம்ஷோர் தேவலாம்.  ஆனால் அங்கேயே சாப்பிட்டு சாப்பிட்டு … Read more

பன்னெண்டு டாலர் மேட்டர்!

தலைக்கு மேல் வேலை. அதற்கிடையில் இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. அமெரிக்காவில் மார்ஜினல் மேன் நாவல் amazon.com மூலம் கிடைக்கிறது. விலை 12 டாலர். அது விஷயமாகத்தான் இதை எழுதுகிறேன். தயவுசெய்து யாரும் என் மீது கோபம் கொள்ளாமல் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்காவில் வசிக்கும் சுமார் நூறு தமிழ் நண்பர்கள் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள். என்னைப் பெரிதும் நேசிப்பவர்கள். என்னைப் புரிந்து கொண்டவர்கள். அவ்வப்போது என்னைத் தொலைபேசியிலும் தொடர்பு கொள்பவர்கள். சரி, மார்ஜினல் … Read more

அக்கார அடிசிலும் மாசிக் கருவாடும்…

இப்போது நான் இங்கே எழுதப் போகும் விஷயம் பலருக்கும் பிடிக்கப் போவதில்லை என்று முன்கூட்டியே யூகிக்க முடிகிறது.  இந்தியச் சமூகம் சாதியச் சமூகம்.  சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினாலும் அது ஒரு கனவு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.  நகரங்களைப் பொறுத்தவரை அவ்வளவாக சாதிகள் துருத்திக் கொண்டு வெளியே தெரிவதில்லை.  எனக்கு எவ்விதமான சாதி அபிபானமும் கிடையாது.  தேச அபிமானமே இல்லாதவனிடம் சாதி அபிமானம் எப்படி இருக்கும்?  மேலும், பல சாதிகளின் கலப்பில் பிறந்ததால் எந்த … Read more

துஸ்மெக்னிகோவ், துர்மஸ்கினிகோவ்…

என்னைப் பற்றிய ஒரு குறிப்பில் அராத்து பின்வருமாறு எழுதியுள்ளார்: கோசமாய் கடற்கரையில் நள்ளிரவு 2 மணிக்கு , தஸ்தாவஸ்கி , டால்ஸ்டாய் எல்லாம் குடும்பக் கதை எழுத்தாளர்கள் என்று சொன்ன (துர்மக்னிகோவோ என்னவோ பெயர் மறந்து விட்டது) ஒருவரைப் பற்றி ஆரம்பித்து, அவரின் குருவைச் சொல்லி, நடுவில் நபக்கோவ் பற்றி சேர்த்துக்கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நான் ஸ்டாப்பாக பேசிக்கொண்டு இருந்தார் சாரு. நாங்களும் லேசாக கண்கள் கலங்க அதைத் தனியாக ஒரு குழுவாக அமர்ந்து … Read more