வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்…

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற என் நூலை உங்களில் யாரும் படித்திருக்க வாய்ப்பே இல்லை. அதில் நேற்று முழுவதும் ஆழ்ந்து பிழைதிருத்தம் செய்து ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்குக் கொடுத்தேன். அதை ஏன் நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்னேன் என்றால், அதில் உள்ள கட்டுரைகள் புதிய தலைமுறை இதழில் வந்தவை. நான் பொதுவாக ஒரு அச்சு இதழில் வந்ததை என் இணைய தளத்திலோ முகநூலிலோ பகிரும் வழக்கம் இல்லாதவன். உதாரணமாக, இப்போது குமுதத்தில் வரும் கட்டுரைகளை அவை … Read more

ஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)

திட்டம் போட்டு என்னை ஏமாற்ற நினைத்த ஒரு கூட்டத்தின் தலைவன் தானே ஒரு பஞ்சாயத்தை அரசால் அமைக்க பெற்ற ஒரு குழுவின் முன் கூட்டி, அமாம் நான் இவரை ஏமாற்ற நினைத்தது உண்மை தான் என சொன்னதோடு அல்லாமல் எழுதியும் கொடுக்கிறான். இருவரோடு ஆரம்பித்த குழு மதியத்திற்குள் மூவரானது பல கோட்டைகளை தன் வாழ்நாளில் கட்டி சில சக்திகளை தன் வசப்படுத்தியவராக காட்சி அளித்தார் ஒருவர் .தீர்க்கமான குரலோடு குற்றத்தை நிமிடத்தில் கடிந்தார் ஒருவர். ஏனோ தெரியவில்லை … Read more

கீழடியும் ஸ்டாலினும்…

திமுக தலைவர் ஸ்டாலின் பி.ஏ. படித்தவர். அவரை நான் மதிக்கிறேன். நானோ பியுசி ஃபெயில். ஆனால் ஸ்கூலில் படித்த ஹிஸ்ட்ரி ஏதோ கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது.ஸ்டாலின் அவர்கள் இனி இந்திய வரலாற்றைக் கீழடியிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சிந்து சமவெளி நாகரீகம் கி.மு. 3300 இலிருந்து கி.மு. 1300 வரை இருந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று எட்டாங்கிளாஸில் படித்திருக்கிறோமே. அதை என்ன செய்வது? ஏற்கனவே உலக வரலாற்றில் இடம் பெற்று விட்ட … Read more

பிக்பாஸ் 3

பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற சில புத்திஜீவிகள் நினைப்பது போல் ஒரு முட்டாள்தனமான டிவி சீரியல் அல்ல. இந்த சமூகத்தைப் புரிந்து கொள்ள தமிழ் தினசரிகள் எப்படி ஒரு முக்கியமான சாதனமோ அதை விட பல நூறு மடங்கு முக்கியமான நிகழ்வாகத் தெரிகிறது. ஆரம்பத்தில் நான் பார்க்காத 60 நாட்களையும் கொஞ்சம் கொஞ்சமாகவாவது பார்த்து விட வேண்டும் என்று பார்க்கிறேன். ஒரு மணி நேரத்தில் ஒரு பத்து நிமிடம். இல்லாவிட்டால் கஸ்தூரி மாதிரியான கேரட்கர்களை சினிமாவில் கூட பார்ப்பது … Read more

பூனை உலகம்

சென்ற மாதத்தில் ஒருநாள் பூனைகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்த போது பக்கத்துக் குடியிருப்பில் வசிக்கும் நான்கு பூனைக் குட்டிகள் செட்டாக என் குடியிருப்புக்கு வந்து உணவு கேட்டுக் கெஞ்சின.  எங்கள் குடியிருப்பில் ஸிஸ்ஸி, புஸ்ஸி (இரண்டும் பெண்), ரௌடி (எந்த வம்புதும்புக்கும் போகாமல் மற்ற பூனைகள் கடித்தாலும் வாங்கிக் கொண்டு சாதுவாக இருப்பதால் அதற்கு ரௌடி என்று பெயர் வைத்தேன்), டெட்டி (குட்டி), குண்டு, ப்ரௌனி (இந்த ப்ரௌனிக்கு ஊளை என்ற செல்லப் பெயரும் உண்டு; சாப்பிட்டு … Read more