22 ஏப்ரல் வெனிஸில் என் சிறுகதை வாசிப்பு

Fondazione Prada அமைப்பின் ஓவிய – சிற்ப – இலக்கிய விழா நாளை மாலை வெனிஸில் தொடங்குகிறது.  எனக்கு அழைப்பு இருந்தும் ஔரங்ஸேபை முடிக்க வேண்டியிருப்பதால் நான் செல்லவில்லை.  உலகம் முழுவதிலும் இருந்து 32 எழுத்தாளர்கள் இந்த விழாவுக்காகவே எழுதிய புதிய கதைகளை நாளை ஜார்ஜ் கைடால் வாசிக்கிறார்.  இதில் ஹானான் அல்-ஷேக்கின் ஒரு கதையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.  அலெக்ஸாந்தர் க்லூஜ் மிக முக்கியமான எழுத்தாளராக உலகம் முழுதும் அறியப்பட்டவர்.  கண்காட்சி நவம்பர் வரை இருப்பதால் பிறகு … Read more

இன்னொரு கவிதை: மகிழ்ச்சி

நீ நினைப்பதுபோல் நான் மகிழ்ச்சியாக இல்லை என்றாள் மகிழ்ச்சி என்றேன் பிறிதொரு நாள் இவ்வுலகில் நீதானென் ஒரே மகிழ்ச்சி உன்னை ஒருக்கணமும் பிரிந்திருக்க சம்மதியேன் என்றாள் மகிழ்ச்சி என்றேன் இப்போது மகிழ்ச்சி குறித்து நானும் முதல்முறையாக யோசிக்க ஆரம்பித் திருக்கிறேன்

இளம் காலை நேரத்தில் ஒரு கவிதை: மீனாட்சி எனும் சாதகப் பட்சி

1வருகை________கருப்புத் தோல் பரட்டைத் தலை அழுக்கு வேட்டிவியர்த்த உடல்காலில் செருப்பில்லைஒருகையில் ஜோசியக் கிளிக்கூண்டுஇன்னொரு கையில்இரண்டாக மடித்த பிளாஸ்டிக் விரிப்பு“ஐயாவுக்குத் தான் ஜோசியம் பார்க்கணும்” என்றுஎன்னைக் காட்டிச் சொன்னார் நண்பர்தலைக்கு அம்பது ரூபாய் எனவிலை வைப்பது போல்கட்டணத்தைச் சொன்னவாறே“தாராளமாகப் பார்க்கலாம்” என்றபடிவிரிப்பை விரித்து  அமர்ந்தான் கிளி ஜோசியன் (2)வாக்கு______“அம்மா மீனாட்சி, ஐயாவுக்கு ஒரு சீட்டு எடு”கதவு திறந்து வெளியே வந்துகட்டிலிருந்து ஒரு சீட்டெடுத்துக் கொடுத்தாள் மீனாட்சிஎன்ன படமோ எது பார்த்தானோ“திருஷ்டி இருக்கிறது ஐயா, நிறைய திருஷ்டி இருக்கிறதுஅந்த திருஷ்டியை … Read more

இந்த இளம் காலை நேரத்தில் ஒரு கவிதை: மாடப்புறா சொன்ன கதை

தர்ஹாவின் மாடங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான புறாக்களில் நானும் ஒருத்தி எங்களுக்கு யாரும் பெயரிடுவதில்லை என்றாலும் உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிமித்தம் நானே எனக்கொரு பெயர் சூட்டிக் கொண்டேன் பர்வீன் பந்துவில் வரும் ப பயத்தில் வரும் ப அல்ல இதிலொன்றும் எனக்குப் பிரச்சினை இல்லை இதை நான் சொல்லக் கேட்டு எழுதுபவன் ஆட்சேபிக்கலாம் எஜமானின் அருள் நாடி வருவோரும் செல்வோரும் பலருண்டு சிலபேர் இங்கேயே சிலநாள் தங்கிச் செல்வதுமுண்டு குளுந்த மண்டபத்தில் அமர்ந்து தன் கதையை … Read more

இன்றைய மூன்றாவது கவிதை: காடு சுடும் மணம்

வீட்டுக்குப் பின்னே சுடுகாடு சிறு வயதில் தெரிந்த மரண மணம்  மழைக் காலத்தில் அதிகமுமுண்டு முதல் மழை விழுந்த மண்  அம்மா சாணி மிதித்து றாட்டி தட்டும் மணம் கண்ணில் விழும் தூசைப் போக்க பக்கத்து வீட்டு அத்தாச்சி பீய்ச்சி அடிக்கும் முலைப்பால்  அத்தையின் வாய்  அம்மாவின் கை  நைனாவின் ரத்தினம் பொடி  கோழிப் பீ தாழம்பூ தைத்த சடை போட்டு வரும் அக்காக்களின் மணம் தர்ஹாவின் கொமஞ்சான்  எஜமானின் அருள்  மனாராக்களில் வாசம் செய்யும் புறாக்களின் … Read more

இன்றைய இரண்டாவது கவிதை: காற்றிலாவது…

காற்றிலாவது… அவளுக்குப் பதினாறு வயது பேரழகு என்று நீங்கள் எதைச் சொல்வீர்களோ அதையெல்லாம் மீறிய அழகு ஒருநாள்  கைகாலை அசைக்க முடியவில்லை பேச முடியவில்லை சப்தநாடியும் செயலிழந்து போனது LGMD என்றார் மருத்துவர் இனிமேல் அந்தப் பெண்ணுக்கு ஆட்டமில்லை  ஓட்டமில்லை பௌதிக இயக்கமில்லை  துன்ப சாகரத்தில் வீழ்ந்தது  குடும்பம் வாழ்க்கை அபத்தமென்றார் நண்பர் ஜோ எல்லாம் கர்மா என்றாள் மூதாட்டி இன்று எனக்கொரு  ஜனன செய்தி வந்த போது எதுவொன்றும் சொல்லத் தோணாமல் விக்கித்து நின்றேன் தாள … Read more