ஏன் வாழ்த்து சொல்லவில்லை? ஒரு விளக்கம்

எங்கள் பிரியத்துக்குரிய சாருவுக்கு, விஷ்ணுபுரம் விருதுக்காக என் பணிவான, மனப்பூர்வமான வாழ்த்துக்களை தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.  மேலும், காலம் தாழ்த்தி வாழ்த்துவதற்காக மிகவும் பணிவுடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  உண்மையை சொல்லப் போனால், தங்களை வாழ்த்துவதற்கு நான் மிகவும் தயங்கினேன்.  ஏன் என்பதற்கான காரணங்களை இங்கே தொகுத்துப் பார்க்கிறேன்: 1.எங்களைப் பொறுத்தவரை நீங்கள் larger than life நாயகன்.  என்றைக்குமே அழிவு இல்லாத ராக் ஸ்டார்.  நானோ ஒரு பொடியன்.  நான் எப்படி ஒரு லெஜண்டாக வாழும் … Read more

உதவி

எழுத்துக்கும் வாழ்க்கைக்குமான விளையாட்டு என்ற அராத்துவின் கட்டுரையை ஃபேஸ்புக்கில் படித்த அபிலாஷ் பின்வருமாறு ஒரு கருத்தைப் பதிவு செய்தார். ”உண்மைதான். ஒருமுறை சாருவுடன் டின்னருக்குப் போனேன். நான் வற்புறுத்தியும் கூட அவராக பணத்தை செலுத்தி விட்டார். குறைந்தது பணத்தை பகிர்ந்திருக்கலாமே எனக் கேட்டால் ஒப்புக் கொள்ளவில்லை. நானாகவே முதலில் பிடிவாதமாகக் கொடுத்திருக்கணுமோ என நினைத்து வருந்தினேன். ஆனால் சாருவுக்கு அப்படி பணம் பற்றின கவலைகள் ஒன்றுமில்லை.” இதற்கு அராத்துவின் பதில்: ”அதிலும் எழுத்தாளர் என்றால் சாரு அவரை … Read more

ஸீரோ டிகிரி: பல்லவி

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஸீரோ டிகிரி ஆங்கிலத்தில் வெளிவந்த போது அதற்கு பல்லவி எழுதிய மதிப்புரையின் லிங்கைக் கொடுத்திருக்கிறேன். பல்லவி தொடர்ந்து புத்தக அறிமுகங்களும் மதிப்புரைகளும் எழுதுபவர். அவர் எழுதிய மதிப்புரைகளிலேயே மிக அதிக அளவுக்கு எதிர்வினைகளும் வசைகளும் கிடைக்கப் பெற்ற மதிப்புரை ஸீரோ டிகிரி நாவலுக்கு எழுதப்பட்டதுதான். லிங்க்: On Charu Nivedita’s ‘Zero Degree’ (Trans. by Pritham K. Chakravarthy & Rakesh Khanna) | In a Brown Study (wordpress.com)

எழுத்தும் வாழ்வும்…

சாருநான் தங்களுக்கு முன்னமே வாழ்த்து சொல்லியிருப்பினும் இன்றுசாருதாசன் மற்றும் அராத்து, வளன், காயத்ரி, நிர்மல், முருகேச பாண்டியன் கட்டுரைகளைப் படிக்கும் போது நான் வெறுமனே சம்பிரதாயமான வாழ்த்தாகக் கூறிவிட்டதுபோல ஒரு உறுத்தல்.இன்று நாங்கள் கொண்டாடிவரும் இத்தருணமானது தமிழ் இலக்கியப் பரப்பின் ஒரு முக்கிய நிகழ்வாகவே பார்க்கிறேன். இது ஓர் ஆரோக்கியமான, நிறைவான, முதிர்ச்சி பெற்ற சூழலின் துவக்கப்புள்ளியாகத் தெரிகிறது. அது மட்டுல்லாது பலரது கடிதங்கள் ஏற்படுத்திய முக்கிய விளைவுஎன்னவெனில் மீண்டும் தங்களது நூல்களை மறுவாசிப்பு செய்யவும் சரியான … Read more

இன்னும் இருநூறு ஆண்டுகள் கழித்து…

1.அது என்ன பிறழ்வெழுத்து? இவ்வாறு சொல்பவர்கள் அனைவரும், சாருவின் கட்டுரைகளைப் படித்துள்ளார்களா? பிறழ்வெழுத்து என்ன மனம் பிறழ்ந்த நிலையில் எழுதப்படுவதா? மனம் பிறழ்ந்த மக்களைப் பற்றி எழுதப்படுவதா? மனம் ஏன் பிறழ்கிறது? தனிமை, இருந்தலியல் பிரச்சினை, எதிர்கால நிச்சயமற்ற தன்மை, முக்கியமாக சமூகம் நம்  முன்னால் உருவாக்கி வைத்துள்ள சட்டகத்துக்குள் பொருந்த முடியாமை… ’இவற்றுக்கு மருந்தாக இன்னொரு கூட்டத்தை உருவாக்கி புதிய பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்; பாதுகாப்பாக இருக்கும்’ என்பதுதான் இதுவரை சொல்லப்பட்டது. எப்படியாயினும் வாழ்க்கை கூட்டத்தை … Read more

எழுத்து, வாழ்க்கை – இரண்டின் நோக்கமும் என்ன?

டர்ட்டி ரியலிஸம் என்றொரு எழுத்து வகைமை உண்டு. இதை, சமகால வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்டவர்களின், விளிம்பு நிலை மனிதர்களின் இலக்கியம் என்று கூறலாம். ஒரு நகைமுரண் என்னவென்றால், டர்ட்டி ரியலிஸ எழுத்தாளர்களும் அவர்களது சமகாலத்தில் சக எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும்  புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருப்பது. அதன் பிதாமகன் என்று அறியப்படுபவர் ‘சார்ல்ஸ் பூகோவ்ஸ்கி’. அவ்வகையில், அரவிந்தன்களும் ஹென்றிகளும் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ் இலக்கியப் பரப்பில், கண்ணாயிரம் பெருமாளை கர்வத்தோடு முன்வைத்தவர் சாரு. சாருவை வெறுப்பதற்கான காரணங்களை ஒருவர் எந்த சிரமமும் இன்றிக் கண்டடையலாம். … Read more