புத்தகங்களில் கையெழுத்து…

அன்புள்ள சாரு ’நான்தான் ஓளரங்ஸேப்’ நாவல் இன்று கிடைக்கப்பெற்றேன். என் மகிழ்ச்சியை பின்னால் ஏற்பட்ட திகைப்பு பல மடங்காக்கியது.   திகைப்புக்கு காரணம்,   புத்தகம் உங்கள் கையெழுத்துடன் வந்ததுதான். சூழ்நிலை காரணமாக எந்த சிறப்புத் திட்டத்திலும் என்னால் பங்கேற்கமுடியவில்லை.  எனினும், புத்தகம் உங்கள் கையெழுத்துடன் வந்திருக்கிறது.  முன்பதிவு செய்த அனைவருக்கும் அவர்களின் பெயர் எழுதி, கையெழுத்திட்டு தருவது உங்கள் அன்பையும் அக்கரையையுமே காட்டுகிறது. நன்றியுடன் பெற்றுக்கொள்கிறேன். வேம்பு. கே. அன்புள்ள வேம்பு, இதேபோல் இன்னும் பலரும் எழுதியிருந்தார்கள்.  மொத்தம் … Read more

ஒரு அற்புதத் தருணம்

அன்புள்ள சாரு,நான் 24 வயது இளைஞன். மூன்று வருடங்களாக தங்களின் எழுத்தை வாசித்து வருகிறேன். கோவை புத்தகக் கண்காட்சியில் நேரில் சந்தித்திருக்கிறேன். தங்களுடைய zoom உரையாடல்களில் பூனைகள் தங்கள் தோள் மீது அமர்வதும் சுற்றி வருவதையும் பார்த்திருக்கிறேன். ஒரு surreal அனுபவமாக இருந்தது. இன்று ஶ்ரீ வில்லிபுத்தூர் மடவார்குளம் சிவன் கோவிலில் கொடிமரம் பின் இருக்கும் ஆமை வடிவ கல்லில் அமர்ந்து கண்களை மூடினேன் யாரோ கையைத் தொடுவது போல் இருந்தது. கண்களைத் திறந்து பார்த்தால் ஒரு … Read more

இன்னும் வராத வாழ்த்து

விஷ்ணுபுரம் விருது குறித்து என்னைப் பலரும் வாழ்த்தினார்கள். மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இருந்தாலும் எனக்கு வராத வாழ்த்து பற்றி மனம் கிலேசம் அடைகிறது. தமிழக முதல்வர் இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

விருது பற்றி…

விருது பற்றி பலரும் எழுதி விட்டார்கள். எதற்குமே எதிர்வினை காட்டாத காயத்ரியே எழுதி விட்டாள். எல்லாவற்றிலும் ஆகப் பிடித்ததாக வளன் அரசு எழுதியதைச் சொல்வேன். ஏனென்றால், அவன் என்னை மிக அரிதாகவே சந்தித்திருக்கிறான். ஒருமுறை என் வீட்டுக்குக் கீழே வந்து நின்று கொண்டு கீழே வாருங்கள் அப்பா என்றான். அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான். ஆனால் அதற்கு முந்தின நாள்தான் நான் ஒரு நண்பரைப் பார்த்து விட்டு வீட்டுக்கு காலை ஒன்பது மணிக்கு வந்திருந்தேன். வீடே அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது. … Read more

குடியும் விருதும்

கீழே காணும் கவிதையை டார்ச்சர் கோவிந்தனுக்கு அனுப்பினேன். கேவலம் கேவலம், இதெல்லாம் ஒரு கவிதையா என்றார். ஐயோ, நீங்கள் எழுதியதிலேயே சிறந்த கவிதை இதுதான் என்று —————————சொன்னாரே என்றேன். (டேஷில் ஒரு கவிஞரின் பெயர்) உங்களுக்கு ஜால்ரா கூட்டம்தான் பிடித்திருக்கிறது. தயவுசெய்து இதை வெளியிடாதீர்கள் என்றார் மீண்டும் டார்ச்சர். டார்ச்சர் சொல்வதையெல்லாம் கேட்டால் நான் மைலாப்பூர் மாமா மாதிரிதான் ஆவேன். அதனால் மேற்படி கவிதையை இங்கே வெளியிடுகிறேன். எனக்கு ஒரு விருது கிடைத்ததுவிழாவுக்குப் போகும்போது குடித்து விட்டுப் … Read more

மலக்கரைசல்

ஒரு காலத்தில் மலத்தைக் கரைத்து தலித்துகளின் வாயில் ஊற்றுவார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அப்படி நடந்த சம்பவத்தை நாம் அறிந்தோம். இலக்கியத்திலும் அப்படி அவ்வப்போது நடப்பதுண்டு. ராசேந்திர சோழனின் இசைவு என்ற கதை அப்படிப்பட்ட மலக் கரைசல்தான். அம்மா வந்தாள் நாவலில் மகன் தன் வேத பாடத்தை முடித்து விட்டு பல ஆண்டுகள் கழித்துத் தன் வீட்டுக்கு வருவான். அங்கே ஊஞ்சலில் ஒரு மாமா ஆடிக் கொண்டிருப்பார். மாமா என்பான். டேய் உன் தம்பிடா என்பாள் … Read more