வேட்டை

கவிதையைப் படித்தாள்கவிதைக்குரியவள்ஆனால்ஒரு சிறிய கூச்சம்சங்கடத்தின் மெல்லிய நிழல்அவள் இதயத்தில் தங்கி விட்டதுஏன் அடிமைத்தனம்சமமாக இருந்தாலென்னஎன்ற கேள்விகள் ஓடியது ஒன் நைட் ஸ்டாண்ட் என்றும்பத்துப் பன்னிரண்டு காதலிகளோடும்அலைந்து திரிந்துஆடிப் பாடியஅவனைஅடிமையாக்கியது யார்கேட்க நினைத்துக்கேட்கவில்லைகேள்விகள் துக்கத்தின் விதைகள் 2 நண்பன் ஒரு கதை சொன்னான்அவன் மனையாளின் ப்ளூ டிக்திடீரென்று மறைந்ததுஇவன் சிரித்துக்கொண்டேஎன்னவென்று கேட்டான்அவளும் சிரித்துக்கொண்டேம் என்றாள்இவனும் சிரித்துக்கொண்டேபோய் விட்டான் உனக்கு அரச லச்சினைபதித்த பத்திரமொன்று இருக்கிறதுமரணம் வரைஉனக்கு அவள்அவளுக்கு நீவெளியே போனால்காட்டு விலங்குகள் குதறித் தள்ளும் அவனோ வழிப்போக்கன்எந்தப் பத்திரமுமில்லைகாரணம் … Read more

விரும்புகிறேன்…

நீ என்னில் மூழ்க வேண்டுமென்றும்நான் உன்னுள் கரைய வேண்டுமென்றும்இன்னும் உன்னைக் காதலிக்கவே தொடங்காதநான் இனியும் தாமதிக்கக் கூடாதென்றும்நீ என் உயிர்த்தாதுவை உன் குருதிக்குள்ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும்நான் உன்னை உறிஞ்சி விடாய் தணிய வேண்டுமென்றும்உனக்காகக் கொலை செய்ய வேண்டுமென்றும்உனக்காகத் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்றும்உனக்காக நான் வெட்கம் மானம் துறக்க வேண்டுமென்றும்உனக்காக நான் மலையுச்சியிலிருந்து குதிக்க வேண்டுமென்றும்உனக்காக நான் சிறை செல்ல வேண்டுமென்றும்உனக்காக நான் கவிதை எழுத வேண்டுமென்றும்உனக்காக நான் கவிதையெழுதுவதை நிறுத்த வேண்டுமென்றும்உன் சுதந்திரத்தில் ஒருபோதும் குறுக்கிடக் கூடாதென்றும்ஏன் … Read more

தீராத அக்கப்போர்

நேற்று முன்னிரவு ஒரு கவிதைசில நிமிடங்களில் எழுதினேன்அத்தனை சடுதியில் இதுவரைவந்ததில்லைஉனக்கு அனுப்பினேன்இன்று பேசும்போதுகேட்க மறந்து போனேன்படித்தாயா இல்லையாதெரிந்தால் போதும்வேறெதுவும் வேண்டாம்எழுபத்திரண்டு மணி நேரம்சென்று கூட படிகவலையில்லைஆனால்ப்ளூ டிக் மறைக்கப்படாதிருந்தால்’உனக்கு நேரமில்லை, படிக்கவில்லை’என்றோ‘ஆ, படித்து விட்டாள்’என்றோதெரிந்து கொள்வேன்இப்போது முழு இருள்படித்தாயா இல்லையாதெரியாதுநீ படித்தால் நான் வாழ்வேன்.படிக்காவிட்டால்இன்னும் எழுதுவேன். ஒரு முடிவு செய்தேன்இந்த ப்ளூ டிக் அக்கப்போரெல்லாம்இனி எதற்குநம் ஃபோனைஅணைத்து வைப்போம்உன் ஃபோன்உன் சுதந்திரம்என் ஃபோன்என் சுதந்திரம்வெளியுலகத் தொடர்புக்குஇனி மின்னஞ்சல் மட்டும்தான் பாதிக்கப்படுவோர் பலர்என்கிறாயாதனியொருவனுக்கு ப்ளூ டிக்இல்லையெனில்ஜெகத்தினை அழித்திடுவோம்கபர்தார்

நோயும் மருந்தும்

அடிக்கடி கேட்கப்படுகிறதுஏன் கவிதை எழுதுகிறீர்கள்நெரூதாவிடமும் கேட்கப்பட்டதுநானா கவிதையைத் தேடிப் போனேன்கவிதை என்னைத் தேடி வந்ததுஎன்றார் அவர் ஒரு பத்திரிகைக்குக்கவிதை அனுப்பினேன்எடிட்டர் கேட்டார்ஏன் கவிதை எழுதுகிறீர்கள் எனக்குத் தெரியவில்லைஎன்றேன் வெகுளியாய் மாரத்தன் ஓட்டத்தைப் போல்இன்று ஒரு ஆறு கவிதை எழுதினேன் படித்து விட்டுஏனிந்த வெறிஏனிந்தப் பித்தநிலைஎன்ன செய்தால் அடங்கும்எனக் கேட்டாள்கவிதைக்கு உரியவள் சிசு வெளியேற ஒன்பது மாதம்வெளியே வந்தால் உயிரின் மலர்ச்சிஉள்ளே இருந்தால் மரணத்தின்காரிருள்கவிதைக்கு எத்தனைக் காலம்என்பதை யாரறிவார்வெளியே வந்தால் உயிர்உள்ளே இருந்தால் மரணம்என்றேன் இன்னொரு பதிலும் உண்டுசொர்க்கம் … Read more

மந்திர வனத்தில் தொலைந்து போனவன்

அடியேய்நீயே சொல்ஏன் என்னை இப்படிப் பித்தனாக்கினாய்?உன் இதயத்தைத் தொட்டு உறுதியாகச் சொல்நீதானே இந்தப் பைத்தியத்தின் மூலம்? மூன்று ஆண்டுகள் நானுண்டுஎன் எழுத்து உண்டு என்றுதானே இருந்தேன்?உன்னைத் தொந்தரவு செய்தேனா?உன் மௌனம் பற்றி வாதாடினேனா?உன் ப்ளூ டிக்கை மறைத்ததற்கு நொந்தேனா?ஏன் என்னை சந்திக்கவில்லையெனப் புகார் செய்தேனா? இப்போது பார்நீ ஒரு மந்திரக் கண்ணாடிஎன் ஆன்மாவில் புகுந்துஎன்னை உன் நிழலில் கட்டிப் போட்டாய்அந்த மலைப்பிரதேசத்தில்என்னை விட்டுப் பிரிய மனமில்லாமல்நீ விட்ட கண்ணீர்தான்என்னை இப்படிப் பித்தனாக்கியதுஅந்த உன் கண்ணீர்தீயாய் மாறிஎன் இதயத்தையும்நரம்புகளையும்எரித்துக்கொண்டிருக்கிறது … Read more

நம்பிக்கை

நம்மால் செய்யக்கூடியதெல்லாம் நம்பிக்கை கொள்வது மட்டுமே நாம் நேசிப்பவர்கள் நம்மையும் நேசிக்க முடியும் என்றும் நாம் யாருடன் நேரம் செலவிட விரும்புகிறோமோ அவர்கள் நம்முடன் நேரம் செலவிட முடியும் என்றும்… Salena Godden