ஆத்மவதம்
மரப்பாச்சி பொம்மைக்குசீலை கட்டிதலை வாரிசடை பின்னிபால் அன்னம் ஊட்டிய சிறுமியிடம்ஒருத்தி சொன்னாள்:”ஏய் மூடத்திஅது வெறும் மரக்கட்டைஅதற்கு உயிரில்லை.”அன்றிலிருந்துமனநலம் குன்றினாள் சிறுமி ஒருவன் தன்னைஞானியென சொல்லி வந்தான்ஒருத்தி அவனிடம்“அனுபவத்தில் சொல்கிறேன்நீ ஞானியல்லபைத்தியம்” என்றாள்அன்றிலிருந்துபைத்தியமானான் ஞானி