வர வர நீ கோட்ஸேவா மாறிண்டு வரே…

வியட்நாமிலிருந்து நண்பர் கோபால் இந்த நகைச்சுவைத் துணுக்கை அனுப்பி வைத்திருந்தார். அந்தக் காலத்து விகடன் ஜோக் மாதிரி இருந்தது. கணவன்: (மனைவியிடம்) வரவர நீ கோட்ஸேவா மாறிண்டு வரே… மனைவி: என்னண்ணா சொல்றேள், புரியல்லையே…? கணவன்: என் பர்ஸ்லேருக்கிற காந்தியையெல்லாம் ஒன்னொன்னா சுட்டுண்டே இருக்கியேன்னு சொல்றேன்… (dedicated kamalhaasan)

நாளை மாலை சாகித்ய அகாதமியில் என் உரை

நாளை மாலை சாகித்ய அகாதமி வளாகத்தில் சா. கந்தசாமியின் தமிழில் சுயசரித்திரங்கள் என்ற நூலைப் பற்றிய புத்தக விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகிறேன். அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுங்கள். நீல பத்மநாபனைப் பற்றிய ஆவணப்படம் ஐந்து மணிக்குத் திரையிடப்படும். அதைத் தொடர்ந்து சா. கந்தசாமியின் நூல் பற்றிய என் உரை இருக்கும். சரியாக ஐந்தரை மணிக்கு என் உரை தொடங்கும். சா. கந்தசாமி என் ஆசான்களில் ஒருவர். அவரும் விழாவில் கலந்து கொள்வார். அவருடைய சாயாவனம் … Read more

கமல் – 40 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த மனிதன்

கமல்ஹாசன் உளறுவதற்கெல்லாம் சினிமாக்காரர்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஜால்ரா அடித்து வந்திருக்கிறார்கள். பாவம் அவர்கள், கமல் கொடார்ட் என்று ஒரு பெயரைச் சொன்னால் அவர்களுக்கு என்ன எழவு புரியப் போகிறது? கொதார் என்ற ஃப்ரெஞ்ச் பெயரைத்தான் அப்படி உளறுகிறார் என்று அவர்களுக்கு என்ன தெரியும்? ஒரு இங்க்லீஷ்காரன் கேண்டி கேண்டி என்று சொன்னால் மற்ற இங்க்லீஷ் மடையன்களுக்கு அது காந்தியைக் குறிக்கிறது என்று தெரியுமா என்ன? கமல் உளறுவதற்கெல்லாம் 40 ஆண்டுகளாகத் தலையாட்டிக் கொண்டிருந்தார்கள். சினிமா மட்டும் … Read more

ராஸ லீலா – வேலை முடிந்தது

ராஸ லீலா பிழைதிருத்தம் முடித்து விட்டேன்.  டைப்செட்டிங் செய்யும் நண்பரிடம் கொடுக்க வேண்டும்.  அவர் இந்தப் பிழைகளையெல்லாம் சரி செய்த பிறகு, சரி செய்த பிரதியை ஒவ்வொரு பிழையாகப் பார்க்க வேண்டும்.  பிரதியைப் படித்துப் பார்க்க வேண்டிய சிரமம் இல்லை.  பிழைகள் சரி செய்யப்பட்டனவா என்று பார்க்க வேண்டும்.  ஒரிரு நாளில் முடிந்து விடும்.  பிழை திருத்தம் செய்வது என்பது பாதாள சாக்கடையில் புகுந்து சுத்தப்படுத்தும் வேலையைப் போன்றது.  அப்படித்தான் இருந்தது எனக்கு.  மது அருந்திக் கொண்டிருந்த … Read more

ராஸ லீலா – பிழை திருத்தம்

ராஸ லீலா பிழை திருத்த வேலை இன்று மதியத்துக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன்.  சுமாராக ஒரு பக்கத்துக்கு 25 பிழைகள். எல்லாம் எழுத்துப் பிழை அல்ல.  Punctuation பிழைகள்.  இதையெல்லாம் எனக்குத் தெரிந்து பெரும்பாலான பதிப்பகங்கள் கண்டு கொள்வதில்லை.  ஆனால் என் புத்தகங்கள் அப்படி இருக்காது.  அதற்கு நான் பொறுப்பு.  ஒரு வாசக நண்பர் நீங்கள் ஏன் பிழை திருத்துகிறீர்கள்; பத்ரியிடம் கேட்டால் ஆளைக் காண்பித்து விடுவாரே என்று எனக்கு ஆலோசனை நல்கியிருக்கிறார்.  இம்மாதிரி ஆலோசனைத் … Read more

ஒரு கடிதம்

வணக்கம் ,                      நான் உங்கள் நெடுநாள் வாசகன்.ஆம் நானும் ஒரு பிராமணன்தான்.அதை சொன்னாலே தமிழ்நாட்டில் எள்ளிநகையாடப்படுவேன் என்று தெரியும்.அதில் விதிவிலக்காக இருந்த ஒரே எழுத்தாளர் நீங்கள்தான்.தமிழ்நாட்டின் அத்தனை எழுத்தாளர்களும் இடதுசாரி-அம்பேத்கரிய-பெரியாரியவாதிகளாக பிராமணர்களை வசைபாடிக்கொண்டிருந்த போது அவர்களுக்கு ஆதரவாக எழுந்த ஒரே குரல் உங்களுடையது.உங்கள் எழுத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட காரணம் நீங்கள் எவர் மீதும் வெறுப்பை உமிழாது இருப்பவர் என்பதாலேயே!இங்கே இஸ்லாமியர்களையோ கிறிஸ்தவர்களையோ … Read more