ஓர் அடிமையின் பாடல்

நான் யார்? நான் நல்லவனா கெட்டவனாரெண்டும் கலந்தவனாதெரியாதுஆனாலொன்றுநான் அடிமைஎப்படியென்று சொல்கிறேன் காதலிக்காக எதையும் செய்பவன் நீ என் காதலிஎன்னை விட்டுஅல்லது விடாமல்என் நண்பனையும் காதலித்தால்நானே உங்களுக்கு அறை ஏற்பாடு செய்வேன்பொஸஸிவ்னெஸ்?துளியுமில்லை பேரழகி நீ பார்க்க மயிலாக இருந்தாலும்மந்தியாக இருந்தாலும்பேரழகி என்பேன்‘பொய் சொல்கிறாய்’என்று நீ சொன்னால்என் காதை வெட்டிஉன் கையில் கொடுப்பேன் பிச்சை எடுத்து கொடுத்த கதை என் மகனார் தன் மனையாளைப் படிக்க வைக்கநாலு லகரம் கேட்டார்நான் பிச்சையெடுத்த காசுகொடுத்தேன்கல்லில் நார் உரிப்பதுபோல்ரெண்டு லகரம் உரித்தேன்பிறகு அலுத்துப் … Read more

மெய்யுணர்தல்

காலையின் இளம் வெயிலில்பாதைகள் என்னைத் தடுக்கி வீழ்த்துகின்றனகுண்டும் குழியுமாகஉன் இதயத்தின் காயங்கள்என் ஆன்மாவை உரசிநான் உன்னில் கரைகிறேன்மேட்டுக்குடி வீதிகளில்உன் மௌனமொரு மறைபொருள்என் கண்கள் இதுவரை காணாதவை பூக்கடையின் மல்லிகைபழக்கடையில் அடுக்கப்பட்ட பழங்கள்இளநீர் விற்பனை –’விலை எழுபது ரூபாய்’ என எழுதப்பட்ட அட்டை –பரந்து விரிந்ததொரு கிரிக்கெட் மைதானம்எல்லாமே இன்றுதான் மெய்வழிப்படுகின்றனஆனால்என் நடை உன் குரல் தேடி அலைகிறதுஒவ்வொரு அடியும் உன்னில் முடிகிறது ஓ, இங்கே பள்ளிக்கூடங்கள் வேறுஆடவரும் பெண்டிரும் தத்தம் குழந்தைகளைமோட்டார் வண்டிகளில் வைத்துப் பறந்து கொண்டிருக்கிறார்கள்பெண்களின் … Read more

வலி உணரா மனிதர்கள்

ஒரு கல்லைப் போலஒரு பனிக்கட்டியைப் போலஎப்படி அவளால் முடிகிறது,எது நடந்தாலும் எதுவுமேநடக்காதது போல் இருக்க? பழைய கதவுகூடதிறந்து மூடப்பட்டால்கொஞ்சம் புலம்புமே? நான் அவளைப் பார்க்கிறேன்கையில் ஒரு தேநீர்க் கோப்பைஎப்போதும் நிறைந்து தளும்பும்புன்னகைஆனால் கண்கள் மட்டும்வெறுமையாகவீட்டு ஜன்னலில் மறந்து வைத்துவிட்டபழைய கண்ணாடி போல. ஒரு காலத்தில்,நானும் தெருவில்திருட்டுத் தொழில் புரிந்தவன்அடி வாங்கினால் வலி தெரியாதிருக்கமாட்டு வால் சூப் குடித்தவன். ஆனால் அவள்எந்தப் பள்ளியில் பயின்றாள்,வலி மரத்துப் போக? ஒருவேளை,ஒரு பழைய பெட்டியின்துருப்பிடித்த பூட்டுஎதையும் உணர மறந்து போகுமே,அப்படியா? அல்லது,அவள் … Read more

ஆதியிலே வார்த்தை இருந்தது

நான்வார்த்தைகளின் கடலில் வாழ்கிறேன்நட்சத்திரங்களின் தூசியைப் போல்அவை என்னைச் சூழ்கின்றனஎன் முன்னோரின் எலும்புகளிலிருந்துகாவியங்கள் செய்கிறேன் சில வார்த்தைகள் செத்து மண்ணோடுமறையசில தேய்ந்து கற்களாய் உருள்கின்றனசிலவோ உயிர்த்துப் பொங்கும் வார்த்தைகளாய்என் உயிர் எரிக்கின்றன வார்த்தைகளால் மனிதர்கள் மகிழ்கிறார்கள்வார்த்தைகளால் மனிதர்கள் காதலிக்கிறார்கள்வார்த்தைகளால் மனிதர்கள் புணர்கிறார்கள்தீர்க்கதரிசிகள் வார்த்தைகளை விதைத்துநம்பிக்கை விருட்சங்களை வளர்க்கின்றனர்ஆனால் அவை மோதிஆயிரமாயிரம் ஆண்டுகள்பூமியிலே குருதிப்புனல் ஓடுகிறது என் காதலிஒரு ரயில் நிலையத்தின் மஞ்சள் வெளிச்சத்தில்பதினெட்டு மாதங்கள் பிரிவின் கல் மேல் காத்திருஎன்றாள்அந்த ஆறு வார்த்தைகள்என்னை மரணத்தின் கரையில் தள்ளியதுஅவளுடைய அடுத்த … Read more

துக்கம் பரவசம்

Adagio for Strings கேட்டுஉங்கள் கதைநாயகிமீளாத் துயரில் தோய்ந்தாளெனஎழுதியிருக்கிறீர்கள்.எனக்கோ அதைக் கேட்டால்ஆன்மாவில் பரவசம்அருவியெனப் பொங்கி வழிகிறதுஎன்றாள் என் தோழி.நான் சொன்னேன்:ஆனந்தமும், துக்கமும், பரவசமும்—ஒன்றே, வேறு இல்லை.பனிமலைகளின் பாதாள மௌனத்தில்,ஒரு நொடியின் நிழல்வாழ்க்கையின் நித்தியப் பொறியைத் தீண்டுகிறது.

மேலும்…

என் நண்பனின் தோழிதென்னாட்டுத் திரையுலகின் காமதேவதைஇளம்வயதில் இறந்து போனாள்தற்கொலையென்றார்கள்கொலையென்றார்கள்தற்கொலையென்றே உறுதியாய்நம்பினேன்ஒரு நட்சத்திரத்தின் தற்கொலையைப் போலஒரு நாய் அல்லது ஓநாயின் தற்கொலையைப் போலஒரு விருட்சத்தின் தற்கொலையைப் போலஒரு நதியின் தற்கொலையைப் போலஒரு நாகரீகத்தின் தற்கொலையைப் போலஒரு வனத்தின் தற்கொலையைப் போலஒரு இனத்தின் தற்கொலையைப் போலஒரு மொழியின் தற்கொலையைப் போலஒரு துறவியின் தற்கொலையைப் போலநிகழ்ந்தது அந்த தேவதையின் தற்கொலை அது தற்கொலையென்று நான்அறிந்தது எப்படியென்றால்நானும் தற்கொலை செய்து கொண்டபோதுஒரு நாளில் இரண்டு மூன்று கவிதைகள் எழுதுகிறேன்ஒரு நாளில் இரண்டு மூன்று … Read more