மனிதர் வாழ லாயக்கில்லாத நாடு…

மனிதர்கள் வாழவே லாயக்கில்லாத நாடாகப் போய் விட்டது இந்த தேசம்.  வேறு தேசங்களில் வாழ வழியில்லாத என்னைப் போன்றவர்கள் இங்கே இருந்தால் ரத்தம் கக்கிச் சாக வேண்டியதுதான் போல.  இல்லாவிட்டால் பணக்காரர்களாக இருக்க வேண்டும். இருந்தால் மற்றவர்கள் நம் காலணியை நக்குவார்கள்.  ஜாலியாக வாழலாம்.  இன்று பாலகுமாரனுக்கு சிராத்தாஞ்சலி என்று அழைத்திருந்தார்கள்.  இப்போதெல்லாம் நான் வூபரில்தான் சவாரி.  சுலபமாக இருக்கிறது.  ஆனால் இன்று வீட்டில் அவந்திகாவுக்கு ஆன்மீகச் சந்திப்பு இருப்பதால் 15 பேர் வருவார்கள்.  அவர்களுக்கு இனிப்பு … Read more

சிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…

ஐந்து நிமிடங்களுக்கு முன்பு ஒரு காணொளி பார்க்கக் கிடைத்தது.  ஒரு சிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம் நுழைகிறது.  அனைவரின் தலையிலும் கவசம்.  கையில் கற்களைத் தடுக்கப் பயன்படுத்தும் கட்டைக் கவசம்.  போலீஸ் மாதிரி தெரியவில்லை.  ரிஸர்வ்ட் போலீஸ் அல்லது ராணுவம் மாதிரி தெரிகிறது.  காணொளி எடுத்தவர்கள் மிக ரகசியமாக எடுத்திருப்பதை அந்தக் காணொளியின் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது.  உள்ளேயிருந்து ஒரு 12 – 15 வயது சிறுவனை இழுத்து வந்து அந்த இருபது முப்பது … Read more

மூடர் உலகம்

  michael769513@gmail.com ஒன்றுமே தெரியாத மூடர்கள் பலர் முகநூலில் வந்து ஏதாவது பேண்டு விட்டுப் போவது வழக்கமாக இருக்கிறது.  தமிழின் மூத்த கவிகளில் ஒருவரான கலாப்ரியாவைக் கூட அவர் யார் எவர் என்ற விபரமே தெரியாமல் சில மூடர்கள் முகநூலில் கலாய்ப்பதைப் பார்த்திருக்கிறேன்.  முழுமையானஎன்றே தமிழ்நாட்டு வாசிப்புச் சூழல் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது.  இவர்களுக்கு எழுத்தாளன் என்றால் யார் என்றே தெரியவில்லை.  வாழ்க்கையில் ஒரு புத்தகத்தையாவது இந்த மூடக் கும்பல் படித்திருக்காது.  குமுதம் விகடனே படித்திருப்பார்களா என்பது … Read more

புவெர்த்தோ ரீக்கோ

ஊரின் மிக அழகான பெண் தொகுப்பில் என் அம்மா ஒரு விபச்சாரி என்று ஒரு கதை உள்ளது.  கரீபிய நாடான புவெர்த்தோ ரீக்கோவின் கதை.  புனைவு அல்ல; பேட்டி.  எழுதியவர் லா பீதா எழுதிய ஆஸ்கார் லூயிஸ்.  அந்தக் கதைக்கு நான் எழுதிய ஒரு அறிமுகம் இது: புவெர்த்தோ ரீக்கோ என் தாய்நாடுகளுள் ஒன்று. காரணம் – என் வாழ்வை மாற்றியமைத்த இரண்டு புத்தகங்களில் ஒன்றான ‘லா பிதா’ புவெர்த்தோ ரீக்கோ மக்களைப் பற்றியது. (மற்றொன்று சே … Read more

ராஜெஷ் 2014-இல் எழுதியது…

ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக்கொள்ளலாம். நாம் எல்லாரும் 1930களில் ஜெர்மனியில் வாழ்கிறோம். நமது தலைவராக ஹிட்லர் இருக்கிறார். ஜெர்மனியிலும் ஹிட்லரை எதிர்க்கும் சிறுபான்மை கும்பல் ஒன்று இருக்கிறது. பெரும்பான்மையான ஜெர்மன் மக்களுக்கு ஹிட்லர் என்பவர் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லக்கூடிய திறன் வாய்ந்தவர் என்பது ஹிட்லரின் பிரச்சாரக் குழுவால் நன்றாக பிரச்சாரம் செய்யப்பட்டு எல்லாரின் மூளையிலும் அழுத்தமாகப் பதிய வைக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த சிறுபான்மை கும்பல் மட்டும் விடாமல் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு பற்றி கூவிக்கொண்டே இருக்கிறது. இதற்கு … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…

ஆண்டு 1981. சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் வெளிவந்து தமிழ் இலக்கியச் சூழலே அதகளம் ஆகிக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு வடிவத்தில் தமிழில் எந்த நாவலுமே வந்ததில்லை என்று ஒரே ஆர்ப்பாட்டம். அதில் உண்மையில்லை. நகுலனின் நினைவுப் பாதை 1972-இலேயே வந்து விட்டது. ஆனால் நகுலன் எதைச் செய்தாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். சுந்தர ராமிசாமிதான் அப்போதைய ரஜினி. என் வயது அப்போது 28. அந்த நாவல் வெளிவந்த ஒருசில தினங்களிலேயே அது பற்றிய … Read more