Marginal Man in UK

லண்டனிலிருந்து கடந்த இரண்டு தினங்களாக பத்து போன் வந்து விட்டது.  amazon.co.uk  என்ற தளத்தில் மார்ஜினல் மேன் புத்தகத்தைத் தேடினால் ஸ்டாக் இல்லை என்று காண்பிக்கிறது என்று எல்லோரும் சொன்னார்கள்.  ஆனால் அமேஸான் யூகேவில் புத்தகம் கிடைக்கிறது.  என்னவென்று பார்த்தால், ஸ்டாக் இல்லை என்று குறிப்பிட்டிருப்பதற்குக் கீழே more buying options என்று குறிப்பிடப்பட்டுள்ளது அல்லவா, அங்கே போய் கிளிக் செய்தால் பல இடங்களில் மார்ஜினல் மேன் கிடைப்பது தெரிகிறது.  நண்பர்கள் அப்படி முயற்சி செய்யும்படி கேட்டுக் … Read more

அன்னையர் தினம்

இன்று அன்னையர் தினம் என்று பேப்பரில் கண்டிருந்தது.  முகநூலிலும் அன்னையர் தினத்துக்காகப் பலர் கண்ணீர் உகுத்திருந்தனர்.  இதற்கு மேல் நான் எழுதப் போகும் விஷயத்தை ஜீரணிக்கக் கொஞ்சம் மன வலு தேவை.  என் மீது நம்பிக்கையும் தேவை.  என்ன நம்பிக்கை என்றால், நான் பெண்களையும் ஆண்களையும் சமமாக பாவிப்பவன்.  இதுதான் மிகவும் முக்கியம்.  நான் பெண்களை மதிப்பவன் என்று சொல்லி, பெண்களுக்கு அதிக சலுகை கொடுத்துக் கொண்டு, ஆனால் மனதளவில் படு மோசமான ஆணாதிக்கவாதிகளாக இருக்கும் பலரை … Read more

முடி கொட்டுது…

சின்ன வயதில் நான் என் அம்மா மாதிரியே இருக்கிறேன் என்று பலரும் சொல்லக் கேள்வியுற்றிருக்கிறேன்.  உருவத்தில் மட்டும் அல்ல; சில பழக்கவழக்கங்களிலும் நான் அம்மா மாதிரிதான்.  அதில் ஒன்று, அவ்வப்போது ஜோசியம் பார்ப்பது.  மற்றவர்களுக்கு அல்ல; எனக்கு.  மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது அம்மா ஜோசியம் பார்ப்பது வழக்கம்.  யாரையும் தேடிப் போக மாட்டார்கள்.  ஜோசியர்களே வீடு தேடி வருவார்கள்.  அது ஒரு சடங்கு போல் நடக்கும்.  நாங்கள் ஆறு குழந்தைகள்.  எல்லோருக்கும் பார்ப்பார்கள்.  இதெல்லாம் எதுக்கும்மா, எல்லோரும் … Read more

சட்டத்துக்கு முன் அனைவரும் சமமே…

எஸ்.வி. சேகருக்கு உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள செய்தி நீதித் துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.  ஏனென்றால், பாடகர் கோவன் அரசுக்கு எதிராகப் பாடிய போது ஏதோ தேசத் துரோகியை, பயங்கரவாதியைக் கைது செய்வது போல் ஒரு போலீஸ் பட்டாளமே போய் அவரைக் கைது செய்தது.  இப்படித்தான் அரசுக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கல்லூரி மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் போட்டது அரசு.  இந்த இரண்டு சம்பவங்களையும் உயர்நீதி மன்ற நீதிபதி மேற்கோள் காட்டி, … Read more

kaala songs…

காலா பாடல்களைக் கேட்டேன். இந்த நாட்டில் ஒரு சினிமாப் பாட்டைக் கூட சினிமாப் பாட்டாக எங்கே கேட்க முடிகிறது? இத்தனைக்கும் யோகி பி, சந்தோஷ் நாராயணன் இருவரும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்தான். ஆனால் காலா பாடல்கள் அனைத்தும் அரசியல் செய்திகளைக் கொண்டிருக்கின்றன. அடங்க மறுப்போம், புரட்சி செய்வோம் என்றெல்லாம் அறை கூவல் விடுக்கின்றன. ரஜினிதான் நம்மைக் காப்பாற்றப் போகின்றவர் என்று உரக்கக் கூவுகின்றன பாடல்கள். உலகம் முழுக்க ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிகள் அனைத்தும் இதே மாதிரியான சொல்லாடல்களைக் … Read more

ஆண்டவன் நினைத்தால்…

சமீபத்தில் கோலா பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஜினி பேசியதை பத்திரிகையில் படித்தேன்.  அந்தப் பேச்சின் நடுவில் அரசியலுக்கு வர மாட்டேன் என்கிறார்.  பேச்சின் இறுதியில் ஆண்டவன் நினைத்தால் வருவேன் என்கிறார்.  வாயில் கெட்ட வார்த்தைதான் வருகிறது. தமிழ்நாடு என்ற இடத்தில் ஒரு படத்துக்கு 60 கோடி (அறுபது கோடியா, இல்லை, அதுக்கும் மேலயா?) ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் ஒரு நடிகர் அரசியலில் நுழையலாமா வேண்டாமா என்று ஜோசியம் சொல்வதைத் தவிர ஆண்டவனுக்கு வேறு … Read more