Notre Dame
காலையிலிருந்து ஐம்பது பேர் துக்க செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். நாத்ர் தேம் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்த போது உங்கள் ஞாபகம் வந்தது என்று எழுதியிருந்தார் நிர்மல். பிரபு காளிதாஸ் புகைப்படச் செய்திகளை அனுப்பியிருந்தார்.
காலையிலிருந்து ஐம்பது பேர் துக்க செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். நாத்ர் தேம் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்த போது உங்கள் ஞாபகம் வந்தது என்று எழுதியிருந்தார் நிர்மல். பிரபு காளிதாஸ் புகைப்படச் செய்திகளை அனுப்பியிருந்தார்.
ஹோர்ஹே பார்ரோஸ் தொர்ரியல்பா (Jorge Barros Torrealba) சந்த்தியாகோவிலுள்ள ஒரு புத்தக வெளியீட்டாளர். செப்டம்பர் 11, 1973லிருந்து 1988 வரையிலான பதினைந்து ஆண்டுகளில் பத்துக்கு ஒருவர் வீதம் சீலேயை விட்டு வெளியேறினார்கள். அதிபர் சால்வதோர் அயெந்தேயின் ஆட்சியில் பார்ரோஸ் அரசாங்கப் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். பிறகு அயெந்தே கொல்லப்பட்ட பிறகு இவரும் மற்றவர்களைப் போலவே நாட்டை விட்டு வெளியேறினார். 1976இலிருந்து 1980 வரை வெனிஸுவலாவில் இருந்தார். 1978 இல் சீலேயில் அடக்குமுறை அதன் உச்சகட்டத்தை எட்டியது. … Read more
ஒருவேளை நான் சீலே போகாமலேயே இறந்து போக நேர்ந்தால் ஆவியாக வந்து உன்னை பயமுறுத்துவேன் என்று அவந்திகாவிடம் நான் அடிக்கடி சொல்வதுண்டு. காரணம், இருபது ஆண்டுகளாக நான் சீலே செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். இருபது ஆண்டுகளாகத் தள்ளிப் போய்க்கொண்டு இருக்கிறது. அதிலும் கடந்த பத்து ஆண்டுகளாக மிகத் தீவிரமாக முயன்றேன். முடியவில்லை. ஆண்டுகள் செல்லச் செல்ல சீலே பயணத்துக்கு என் உடல்நிலை வேறு தன் தகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது. இப்போது என்னால் மலையேறுவது கடினம். … Read more
சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கிக்கும் எனக்கும் உள்ள பல ஒற்றுமைகளில் ஒன்று – எங்களைப் பொறுத்தவரை கதை, கட்டுரை, கவிதை என எல்லாமே ஒன்றுதான். கதை கட்டுரையாக இருக்கும்; கட்டுரை கதையாக வரும்; எல்லாவற்றிலுமே கவிதை ஊடாடிக் கிடக்கும். தற்சமயம் வரம்பு மீறிய பிரதிகள் என்ற என்னுடைய பழைய நூலை மறு பிரசுரத்துக்காக வேண்டி பிழை திருத்தம் செய்து கொண்டிருந்தபோது பின்வரும் பகுதியைக் கண்டு திகைத்துப் போனேன். காரணம், இது கட்டுரைத் தொகுதியில் இருக்கிறது. 1999-ஆம் ஆண்டு எழுதியது. வாஸ்தவத்தில் … Read more
ரொஹேலியோ சினான் பனாமா நாட்டைச் சேர்ந்த Bernardo Domínguez Alba என்பவரின் புனைப்பெயர் ரொஹேலியோ சினான் (Rogelio Sinán 1902-1994). 1938-ஆம் ஆண்டு கல்கத்தாவில் பனாமா நாட்டுத் தூதராக நியமிக்கப்பட்டவர். பிறகு தொடர்ந்து பல ஆசிய நாடுகளில் பனாமாவின் தூதராக இருந்தார். பனாமா திரும்பிய பிறகு பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராக இருந்தார். கவிதை, நாடகம், நாவல் மற்றும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரது ‘சிவப்புத் தொப்பி’ என்ற கதை இங்கே ‘கடல் கன்னி’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் … Read more
ஃபெப்ருவரி பத்தாம் தேதி எழுதிய இந்தக் குறிப்பை சாரு ஆன்லைனில் பதிவேற்றம் செய்தேனா என்று ஞாபகம் இல்லை. ஏற்கனவே படித்தவர்கள் க்ஷமிக்கவும். *** எழுத்தாளன் என்றால் யார்? அவன் என்ன பிஸினஸ்மேனா? ஒரு பிஸினஸ்மேனுக்கு உரிய லாவகங்களும் நெளிவுசுளிவுகளும் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டுமா? அவன் தன் காலத்திய பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போக வேண்டுமா? என் ஆசான்கள் என நான் கருதும் ஒருத்தர் கூட அப்படி வாழவில்லையே? அம்மா வந்தாள் என்ற நாவலில் குடும்பத்தின் … Read more