புத்தக விழாவில் வாங்கிய/கிடைத்த புத்தகங்கள்…

1.ஓ க்ரேஸ்… இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக் கொள் இந்தப் புத்தகத்தை அவசியம் படிப்பேன்.  நான் வளர்த்த பையன்.  வளன்.  உயிர்மை பதிப்பகம். 2. காஃபி சூனியக்காரி – சிறுகதைத் தொகுதி – வாசகசாலை 3. கொனஷ்டை புத்தகங்கள் – தொகுப்பாசிரியர் ராணி திலக் – ஸீரோ டிகிரி பதிப்பகம்.  படித்தே ஆக வேண்டிய கிளாஸிக் வகை. 4. அல்லிக்கேணி – நாவல் – ராம்ஜி நரசிம்மன் – ஸீரோ டிகிரி பதிப்பகம் – படித்து … Read more

இன்று மதியம் பன்னிரண்டிலிருந்து இரண்டு வரை…

என்னடா இது, நலம்விரும்பிகள் சும்மா இருக்கிறார்களே என ஆச்சரியப்பட்டேன். யாரோ ஒருத்தர் அவந்திகாவுக்கு ஃபோன் பண்ணி தடுப்பூசி போட்டு 28 தினங்களுக்குப் பிறகு இன்னொரு ஊசியும் போட்ட பிறகுதான் வேலை செய்யும். இப்போதே ஏன் சாருவை விட்டீர்கள் என்று சொல்லி விட்டார். அதனால் என் பரோல் ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் காலில் கையில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கி மதியம் பன்னிரண்டு மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை ஸீரோ டிகிரி அரங்கில் (எண் 10-11) … Read more

22 வருஷ குமாஸ்தா வாழ்க்கை கொடுத்த பரிசு

அரசாங்க குமாஸ்தாக்களுக்கு ஒரு பொதுக் குணம் உண்டு.  எது சொன்னாலும் யெஸ் சார் என்பார்கள்.  ஏய் மூளை கெட்ட் முண்டம்.  யெஸ் சார்.  நான் 22 வருஷம் குமாஸ்தாவாக இருந்திருக்கிறேன்.  இதில் பத்தை கழித்து விடலாம்.  தில்லியில் நான் பணி புரிந்த சிவில் சப்ளைஸில் இந்த குமாஸ்தாத்தனம் கிடையாது.  அங்கே எல்லோருமே தனிக்காட்டு ராஜாக்கள்.  கொஞ்சூண்டு பணிவு எதிர்பார்ப்பார்கள்.  என் அதிகாரி பெயர் குல்லர்.  குல்லர் “ரவிஜி, கொஞ்சம் ஷர்மாவைக் கூப்பிடுங்களேன்” என்பார்.  உடனே நான் இண்டர்காமை … Read more

புத்தக விழா மகாத்மியங்கள் (2)

ஆஹா, ஆஹா, முறுக்கு கிடைத்து விட்டது. ஆம், என் மனம் கவர்ந்த முறுக்கை எனக்கு ஆசை ஆசையாகத் தின்னக் கொடுக்கும் செந்தில் குமரன் சேலத்திலிருந்து சென்னை வந்து விட்டார். முறுக்கும் கொண்டு வந்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்த மாதிரி முறுக்கை நீங்கள் உலகத்தில் வேறு எங்கேயும் சாப்பிட்டிருக்க முடியாது. சென்னை முறுக்கெல்லாம் முறுக்கே கிடையாது. செந்தில், ஒரு முக்கிய விஷயம். பா.ராகவன் எதிரில் முறுக்கைப் பிரித்து விடாதீர்கள். அந்த ஆளும் என்னை மாதிரிதான் ஒரு சாப்பாட்டுப் பிரியன். … Read more

புத்தக விழா மகாத்மியங்கள்

ஒரு வாசகியின் கடிதம்: ”ஸீரோ டிகிரி அரங்கில் வந்து பார்த்தால் உங்களை ஹக் பண்ணலாமா?  கிஸ் பண்ணலாமா?” நான் எழுதிய பதில்: “அம்மணி, ஒரு துறவி என்பவன் சமூகத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவன்.  ஆனால் இப்போது எனக்கு சில கடமைகள் உள்ளன.  ரிஸ்க் எடுக்க முடியாது.  கொரோனா காரணமாக நாலு அடி எட்ட நின்றே பேசவும்.”  இன்று மாலை நான்கு மணிக்கு சந்திப்போம்.  எல்லோரும் புத்தகம் வாங்கவும் தமக்குப் பிடித்த எழுத்தாளர்களைச் சந்திக்கவும், எழுத்தாளராக இருந்தால் புத்தகங்களில் … Read more

இன்று மாலை நான்கு மணிக்கு…

இன்று மாலை நான்கு மணிக்கு ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். எத்தனை மணி வரை இருப்பேன் என்பது உங்கள் கையில். பா. ராகவனும், அராத்துவும் கூட வருகிறார்கள் என்பதால் கிலி அடிக்கிறது. அ. மார்க்ஸ் நாளை தான் வருகிறார். கவலை இல்லை. பாரா, அராத்து என்ற இளவட்டங்களிடம் நாலு கையெழுத்து என்றால் என்னிடம் ஒரு கையெழுத்து வாங்க வேண்டும். இல்லையென்றால், எஸ்.ரா. ஸ்டாலுக்குப் போய் விடுவேன். நான் அனுபவசாலி என்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. உயிர்மையில் என் … Read more