தேவதைகளும் சாத்தான்களும்…

இலக்கியம் ஒன்றே மனித இனத்தை இன்றைய அழிவிலிருந்து மீட்டெடுக்கக் கூடியது.  நீங்கள் ஒரு இந்துவோ, முஸ்லீமோ, கிறித்தவரோ, பௌத்தரோ யாராக இருந்தாலும் உங்கள் கடவுள் உங்களை மீட்கப் போவதில்லை.  மனிதன் விதைத்ததை மனிதன் மட்டுமே அறுவடை செய்ய முடியும்.  முகமது ஷுக்ரி என்று ஒரு மொராக்கோ தேசத்து எழுத்தாளர் இருந்தார்.  அவர் எழுதிய அல்-கூப்ஸ் அல்-ஹஃபி என்று ஒரு அரபி நாவல் உள்ளது.  அரபி மொழி தெரிந்தவர்கள் அதை அரபியிலேயே படிக்கலாம்.  ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அதன் பெயர் … Read more

சக்ரவாகம், சூரியகாந்தி

காந்தியை மகாத்மாவாக மாற்றிய புத்தகம் டால்ஸ்டாய் எழுதிய The Kingdom of God is Within You.  அதேபோல் இப்போது இருக்கும் நான் இப்போது இருக்கும்படி மாற்றிய எழுத்தாளர் ந. சிதம்பர சுப்ரமணியன்.  அவருடைய நூல்களைப் படிக்கும் போது கடவுளையே நேரில் தரிசிப்பது போல் இருந்தது.  ஏதோ வாய் வார்த்தையாகச் சொல்லவில்லை.  அப்படியே தான் இருந்தது.  படிக்கப் படிக்க அது ஆன்மாவையே ஏதோ செய்தது என்றுதான் தோன்றியது.  இதய நாதம் என்று ஒரு நாவல்.  அதைப் படிக்காதவன் … Read more

சில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…

வாழ்நாளில் ஒருநாள் கூட எழுதாமல் படிக்காமல் இருந்ததில்லை.  ஆனால் முந்தாநாளிலிருந்து கட்டாய ஓய்வு கிடைத்திருக்கிறது.  உணவுப் பழக்கத்தில் நான் சீனர்களைப் போல.  சூடாக சாப்பிடும் பதார்த்தங்களை அதி சூடாக சாப்பிடுவேன்.  தனுப்பான பண்டங்களை அதி தனுப்பாக.  கோக்கைக் கூட சீனர்கள் ஐஸ் கட்டிகளைப் போட்டுத்தான் குடிப்பார்கள்.  அதேபோல் அவர்கள் சாப்பிடும் அளவு சூடாக இந்தியர்களால் சாப்பிட முடியாது.  மற்றவர்கள் காபி குடிப்பதைப் பார்க்கும் போது எனக்கு ஐஸ் காப்பி குடிக்கிறார்களோ என்று தோன்றும்.  காப்பியை யாராவது ஆற்றுவார்களா?  … Read more

தேர்தல் நிலவரம் – கடைசிப் பதிவு

சென்ற தேர்தலில் முக்கியப் பிரச்னைகளாக முன்வைக்கப்பட்டது ஊழலும் விலைவாசி உயர்வும்.  பின்னதை விட  முன்னதுதான் மிகப் பெரிய விவாதப் பொருளாக இருந்தது.  ஐயாயிரம் கோடி ஊழல் பத்தாயிரம் கோடி ஊழல் என்று ஆரம்பித்து ஐநூறு லட்சம் கோடி ஊழல் என்றெல்லாம் வந்தபோது மக்களுக்குக் கண் சுற்றி விட்டது.  எத்தனை பூஜ்யம் வரும் என்றே தெரியவில்லை என்றெல்லாம் கிண்டல் செய்தார்கள்.  ”அஞ்சு ரூபாய்க்கு டிக்கட் எடுக்கவில்லை என்றால் செக்கிங் ஸ்குவாடு போட்டு ஏதோ தீவிரவாதியைப் பிடிப்பது போல் பஸ்ஸின் … Read more

வரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்…

திரைப்படங்களுக்கு வசனம் எழுதி சம்பாதிப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  முதல் பிரச்சினை ஜால்ரா அடிக்க வேண்டும்.  என் நண்பர் ஒருவர் ஒரு படத்துக்கு வசனம் எழுதினார்.  முழுசாக அல்ல.  வசனத்தில் உதவி.  ஆனால் டைட்டிலில் பெயர் வந்தது.  அதுதான் பெரிய விஷயம்.  அவர் ஒரு படத்துக்கு முகநூலில் விமர்சனம் எழுதினார்.  அந்தப் படத்தின் இயக்குனர் இவர் வசன உதவி செய்த படத்தின் இயக்குனரின் நண்பர்.  உடனே இவருடைய இயக்குனர் அந்த விமர்சனத்தை நீக்கச் … Read more