அமெரிக்காவில் அடியேனின் புத்தகங்கள்

நீண்ட காலமாக அமெரிக்க வாழ் தமிழர்களிடம் என் நூல்கள் கிடைக்கவில்லையே என்ற கவலையில் இருந்தேன். அவர்கள் இங்கே தமிழ்நாடு வரும்போது வாங்கினால்தான் உண்டு. ஆனால் அவசரகதியில் வந்து செல்பவர்களால் புத்தகம் வாங்க எல்லாம் நேரத்தை ஒதுக்குவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அதனால் அவர்களுக்கு என் புத்தகங்கள் கிடைக்கவில்லை. அவர்களும் படிக்கவில்லை. இந்த நிலையில் என்னுடைய முப்பது நூல்கள் – ஒவ்வொரு நூலும் 0.99 டாலர் விலையில் – அதாவது ஒரு டாலர் – கிண்டிலில் கிடைக்கிறது. அச்சு … Read more

பூச்சி 77

பூச்சி தொடரின் போது எனக்கு வந்த வசை கடிதங்களைப் பற்றி நான் எப்போதுமே உங்களிடம் தெரிவித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கடிதங்களை நான் படிப்பதில்லை. ஏன் படிக்க வேண்டும்? மேலும் நம்மைப் பற்றி ஒருத்தர் திட்டி எழுதுவது என்பது அவருடைய நோய்மை. என் எழுத்து பிடிக்காவிட்டால் ஒதுங்கிப் போக வேண்டும். அதுதான் ஒரு நாகரீகமான மனிதனுக்கு அழகு. நாம் செத்த எலியைப் பார்த்து மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கிப் போகிறோம். ஆனால் காக்கைக்கு அது உணவு. அப்படி நமக்குப் … Read more

To You Through Me (4)

முதலில் நகுலனின் நாவல்களை எடுத்து வைத்துக் கொள்வோம் என்று என் புத்தக அடுக்குகளில் தேட ஆரம்பித்தேன்.  இரண்டு முழு தினங்கள் ஆயின.  முதலில் இவர்கள் என்ற நாவல் சிக்கியது.  1983-இல் வெளிவந்தது.  வெளியீடு நர்மதா பதிப்பகம்.  விலை ஒன்பது ரூபாய்.  அடுத்து சில அத்தியாயங்கள் என்ற மிகச் சிறிய புத்தகம்.  26 பக்கம்தான்.  சில அத்தியாயங்கள் என்று போட்டு பிராக்கட்டில் நாவல் என்று உள்ளது.  சோபிதம் பதிப்பகம், நாகர்கோவில். இதை நவம்பர் 1984-இல் வாங்கியிருக்கிறேன். இதில் நகுலனின் … Read more

To You Through Me (3)

நகுலனின் இயற்பெயர் T.K. துரைஸ்வாமி.  தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்.  ஆங்கிலப் பேராசிரியர்.  ஆங்கிலத்தில் எழுதியவர்.  அவர் எழுதிய ஆங்கிலக் கவிதைகள் நூல் வடிவில் இணையத்தில் கிடைக்கிறது.  எனக்கு நண்பர் முத்துக்கிருஷ்ணன் அனுப்பியிருந்தார்.  ஆர்வம் உள்ளவர்கள் படித்துப் பார்க்கலாம். https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0011522_Words_to_the_listening_air.pdf

To You Through Me (2)

சி.சு. செல்லப்பாவின் உறவினரான பாலசுப்ரமணியன் என்னுடைய மூத்த நண்பர்.  பெங்களூரில் இருக்கிறார்.  அவர்தான் இந்த இணைப்பை இன்று அனுப்பினார்.  வருடத்தைப் பாருங்கள்.  உடுமலை டாட் காமில் நகுலன் புத்தகங்கள் கிடைக்கின்றன என்றும் தகவல் அனுப்பியிருக்கிறார்.  நற்றிணையிலும் காலச்சுவடுவிலும் நகுலனின் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.  இணையத்திலும் சிலது கிடைக்கலாம்.  சரியாகத் தெரியவில்லை.  (கோட்ட விளையில் நடந்த ‘வானவில் இலக்கிய வட்டம்’ கருத்தரங்கில் மார்ச் 28, 1999 அன்று வாசிக்கப்பட்ட கட்டுரை) வேத மனவெளியில் அலைவுறுதல் மேலோட்டமான பார்வையில் நகுலனின் கதைகள் … Read more

To You Through Me (1)

நேற்றைய சந்திப்பு பற்றி பலரும் உற்சாகமாக எழுதியிருந்தார்கள்.  செல்லப்பா பற்றி முதலில் இரண்டு மணி நேரம் பேசினேன்.  இரண்டு மணி நேரம் தொடர்ந்து பேசியது இதுவே முதல் முறை.  இதற்கு முன் கு.ப.ராஜகோபாலன் பற்றி ஒரு கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் பேசியதுதான் அதிக பட்சம்.  ஆனால் நேற்றுதான் ஒரு விஷயம் தெரிந்தது.  நேரம் இருந்தால் – அதாவது உங்களுக்குப் பொறுமை இருந்தால் – ஐந்து மணி நேரம் கூட விடாமல் பேசலாம் என்பதே அது.  நேற்றே … Read more