அற்புதத் தருணங்கள்…

இன்னும் ரெண்டு நாள் பேப்பர் படிக்கவில்லை.  நாட்டு நடப்பு தெரியாது.  ஒரே நோக்கமாக ஊரின் மிக அழகான பெண் புத்தகத்தை கிண்டிலில் (இங்கே நடுவில் நான் க் போடுவதில்லை.  ஆங்கில வார்த்தைகளோடு தமிழைச் சேர்க்கும் போது எதற்கு ஐயா ஒற்று எழுத்தைப் போட்டு உயிரை வாங்குகிறீர்கள்?  தமிழ்ச் சினிமா!!!) போட்டு விட்டுத்தான் மறுவேலை என்று உட்கார்ந்தேன்.  வார்த்தைக்கு வார்த்தை ஒற்றெழுத்தைப் போடுவதிலேயே நேற்று முழுவதும் போய் விட்டது.  இன்றும் முழுநாளை முழுங்கி விடும்.  நீங்கள் யாருமே இது … Read more

பாலாவும் நானும் – 4

பாலா பற்றிய சிலரது இரங்கல் குறிப்புகளைப் படித்தேன். அறியாமையில் பேசுகிறார்கள். வேறு என்ன சொல்ல இருக்கிறது? நேற்றைய குறிப்பில் ஒரே ஒரு விஷயத்தை எழுத மறந்து போனேன். பாலாவையும் சுஜாதாவையும் வெகுஜன எழுத்தாளர்களாக வைத்திருந்தது தமிழ்ச் சூழல்தானே அவர்களை நான் குற்றம் சொல்ல மாட்டேன். ஒரே ஒரு உதாரணத்தோடு இந்தப் பதிவுகளை முடித்துக் கொள்கிறேன். சுஜாதாவின் தொடர்கதை ஒன்று வெகுஜன இதழில் வெளிவர ஆரம்பித்தது. இரண்டு மூன்று வாரத்திலேயே ஒரு ஜாதி பற்றிய குறிப்பு வர – … Read more

பாலாவும் நானும்… (3)

பாலா உங்களுக்குக் கொடுத்த புத்தகங்களைப் படியுங்கள் சாரு என்று பாலாவின் வாசகர் ஒருவர் எனக்கு அறிவுரை நல்கியுள்ளார்.  நான் மிகத் தெளிவாக பாலா பற்றிய என் பதிவுகளில் அவருக்கும் எனக்குமான நட்பு பற்றிச் சொல்லியிருக்கிறேன்.  அதைப் படித்த பிறகும் இப்படி எனக்கு அறிவுரை சொல்வதிலிருந்து அவர் என் எழுத்தை அறவே படித்ததில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது.  நான் இலக்கியம் சாராத எதையுமே படித்ததில்லை.  பாலாவின் எழுத்து அனைத்தும் வெகுஜன எழுத்தில் அடங்குவது.  Bala is a … Read more

பாலாவும் நானும்…

பாலகுமாரனுக்கும் எனக்கும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிக நெருங்கிய நட்பு இருந்தது.  பல முறை அவர் என் வீட்டுக்கு வந்திருக்கிறார்.  நானும் அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன்.  என் எழுத்தைப் பற்றி பிரமித்து பிரமித்துப் பேசுவார்.  நீ வா போ தான்.  நான் அவரிடம் சொல்வேன், பாலா என் 25-ஆவது வயதில் வெளியான ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் என்ற தொகுப்பில் வந்த உங்கள் கதை ஒன்றைத் தவிர உங்களுடைய வேறு ஒரு கதையோ நாவலோ நான் படித்ததில்லை … Read more

பாலகுமாரன் – அஞ்சலி

பாலா என்ற சித்த புருஷன் ஜூலை 2016 (பாலகுமாரனின் எழுபதாம் பிறந்தநாள் சிறப்பு மலர் ‘எழுத்துக்கு எழுபது’-வில் வெளியான கட்டுரை) எழுபதுகளின் பிற்பகுதியில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் ரோட்டில் இருந்த சாந்தி மேன்ஷனில் தங்கியிருந்தேன். ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் தொகுதி வந்திருந்த நேரம். சுப்ரமண்யராஜு, பாலகுமாரன் போன்ற கோபக்கார இளைஞர்களின் காலம். அப்போது கணையாழியில் ஒரு கவிதை படித்தேன். உனக்கென்ன கோவில் குளம் சாமி பூதம்  ஆயிரமாயிரம் இனிமையாய்ப் பொழுதும் போகும் வலப்பக்கம் கடல் மணலை இடப்பக்கம் … Read more

நான் ஏன் மோடியை எதிர்க்கிறேன்? – 1

தினம் ஒரு புத்தகம் என்று நான் பதிவிடும் நூல்களை இதைப் பார்க்க நேரும் நண்பர்கள் யாரேனும் வாங்குகிறீர்களா? அந்த நூல்கள் பற்றி ஒரு வார்த்தையாவது எழுத வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆவலை அடக்கிக் கொண்டே அந்நூல்களின் அட்டைகளைப் பதிவிடுகிறேன். இதுவரை ஒரு நாள் கூட பதிவு வராமல் இருந்ததில்லை என்பதை கவனியுங்கள். இதையே ஒரு 35 வயதுக்கு உட்பட்ட யாரிடமாவது சொல்லியிருந்தால், செய்து கொண்டே வந்து 27-ஆவது நாள் எனக்கு குதத்தில் வலி, அக்குளில் கட்டி என்று … Read more